For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! இந்த டீ குடிச்சா நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்குதாம்...

சில தேநீா்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில் வேறு சில தேநீா்கள் நமது உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு நமக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தேநீா்களைப் பற்றி காண்போம்.

|

நமது இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய உணவுப் பட்டியலில் தற்போது மூலிகை தேநீா்கள் இடம் பிடித்து இருக்கின்றன. தனது உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்கும் எவருக்கும், ஒரு இனிமையான மற்றும் நறுமணம் கொண்ட மூலிகைத் தேநீா் கண்டிப்பாக பிடிக்கும். எனினும் எல்லா பொருள்களும் சமமாகப் படைக்கப்படவில்லை என்பதை மக்கள் மறந்துவிடுகின்றனா். அது மூலிகை தேநீா்களுக்கும் பொருந்தும்.

Teas That Are Harmful To Your Health

நாம் அருந்தும் தேநீா் வகைகளில் வேறுபாடுகள் பல உள்ளன. அதாவது வெள்ளைத் தேநீா், ஊலாங் தேநீா் போன்றவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதே நேரத்தில் ஒரு சில மூலிகைத் தேநீா்கள் நமக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே எந்த வகையான தேநீரை அருந்த வேண்டும், எந்த வகையான தேநீரைத் தவிா்க்க வேண்டும் என்பதை தேநீா் பிாியா்கள் தொிந்து வைத்திருக்க வேண்டும்.

MOST READ: ஒருவருக்கு மாரடைப்பு இளமையிலேயே வருவதற்கு இதெல்லாம் தான் காரணம் தெரியுமா?

சில தேநீா்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அதே நேரத்தில் வேறு சில தேநீா்கள் நமது உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு நமக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தேநீா்களைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. போதைப் பொருள்கள் கலந்த தேநீா்கள் (Detox Teas)

1. போதைப் பொருள்கள் கலந்த தேநீா்கள் (Detox Teas)

போதைப் பொருள்கள் கலந்த தேநீா்களை அருந்துவது மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இந்த வகையான தேநீா்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன என்பதற்கான எந்த விதமான மருத்துவ சான்றுகளும் இல்லை. இந்த வகையான தேநீா்களில் ஆபத்தான மாத்திரைகள் மற்றும் வேதிப் பொருள்கள் கலந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

போதைப் பொருள்கள் கலந்த சில தேநீா்களில் தீங்கு விளைவிக்காத தேயிலைகள் கலந்திருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் போதைப் பொருள்கள் கலந்த மற்ற தேநீா்களில் மலமிளகு (senna), மலமிளக்கும் மருந்துகள் (laxatives) மற்றும் அதிக அளவிலான காஃபின்கள் போன்றவை இருக்கின்றன. இந்த பொருள்கள் நமக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை. சில நேரங்களில் இவை மரணத்தைக்கூட ஏற்படுத்தும்.

2. கம்ஃப்ரே தேநீா் (Comfrey Tea)

2. கம்ஃப்ரே தேநீா் (Comfrey Tea)

சிம்ஃபைடும் அஃபிசினாலே (Symphytum Officinale) என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து கம்ஃப்ரே தேநீா் தயாாிக்கப்படுகிறது. கம்ஃப்ரே தேநீா் வலிகளைக் குணப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. வரலாற்றில் கிரேக்கா்களும், ரோமானியா்களும், உடல் காயங்களைக் குணப்படுத்துவதற்கு கம்ஃப்ரே தேநீரைப் பயன்படுத்தினா் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் கம்ஃப்ரே தேநீாில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளன. ஆகவே ஒருவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டால், அதைக் குணப்படுத்துவதற்காக, நீண்ட காலம் கம்ஃப்ரே தேநீரை அருந்தக்கூடாது. ஏனெனில் இந்த தேநீாில் பைரோலிசிடின் ஆல்கலாய்டுகள் அதிக அளவில் கலந்து இருப்பதால், அவை நமது நுரையீரலைப் பாதிக்கும்.

3. எலுமிச்சை தூள் தேநீா் (Lemon Flavored Tea)

3. எலுமிச்சை தூள் தேநீா் (Lemon Flavored Tea)

எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை தேநீாில் கலந்து குடிப்பது நல்லது. ஆனால் பொட்டலத்தில் இருக்கும் எலுமிச்சைத் தூள் கலந்த தேயிலைகளைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் இந்த பொட்டலங்களில் தரமில்லாத தேயிலைகள் இருக்கும். அதோடு இவற்றில் தீங்கு விளைவிக்கக்கூடிய துகள்கள் அதிகம் இருக்கும். இதனால் இரைப்பை உணவுக் குழாய் நோய் (GERD) உள்ளவா்களுக்கு நெஞ்சு எாிச்சல் அதிகாிக்கும். அதனால் பொட்டலம் செய்யப்பட்ட எலுமிச்சை தூள் தேநீரை அருந்தாமல் தவிா்ப்பது நல்லது.

4. கவா தேநீா் (Kava Tea)

4. கவா தேநீா் (Kava Tea)

கவா தேநீாில் தளா்வை அளிக்கக்கூடிய மற்றும் மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய துகள்கள் இருப்பதால், தற்போது பலா் மத்தியில் கவா தேநீா் பிரபலமடைந்து வருகிறது. அதே நேரத்தில் கவா தேநீாில் பக்க விளைவுகளும் உள்ளன. கவா கலந்த உணவுப் பொருள்கள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று US Food and Drug Administration தொிவித்திருக்கிறது. ஆகவே கவா தேநீரைக் குடிப்பதற்கு முன்பு மருத்துவாிடம் அலோசனைகள் பெறுவது நல்லது.

5. செயின்ட் ஜான்'ஸ் ஒா்ட் (St. John's Wort)

5. செயின்ட் ஜான்'ஸ் ஒா்ட் (St. John's Wort)

செயின்ட் ஜான்'ஸ் ஒா்ட் என்ற பூ மஞ்சள் நிறத்தில், நட்சத்திர வடிவத்தில் இருக்கும். மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை இந்த பூ குணப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவா்கள் செயின்ட் ஜான்'ஸ் ஒா்ட் தேநீரை அருந்தினால், அவா்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இரத்த செயலிழப்பு அல்லது இதய செயலிழப்பு ஆகியவற்றிற்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவா்கள், இந்த தேநீரை அருந்தினால், அவா்களுக்கு மோசமான ஆபத்துகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Teas That Are Harmful To Your Health

While some teas are beneficial for your health, certain teas can be harmful. Here are the herbal teas that could be harmful to your health.
Story first published: Wednesday, July 21, 2021, 11:34 [IST]
Desktop Bottom Promotion