For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுகு வலியை சாதாரணமா எடுத்துக்கக்கூடாது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

தாங்க முடியாத முதுகு வலியை பல நாட்களாக சந்தித்து, உட்கார, படுக்க அல்லது சௌகரியமாக நிற்க கூட முடியாமல் இருந்தால், அது உடலில் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

|

இன்று இளம் வயதினர் முதல் பலர் முதுகு வலியை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். முதுகு வலி வருவதற்கு நீண்ட நேரம் மோசமான நிலையில் இருப்பது, அதிகளவிலான பளுவை தூக்குவது போன்றவை ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும், வேறு சில தீவிரமான பிரச்சனையின் அறிகுறியாகவும் இது உள்ளது. பலர் தினமும் முதுகு வலியை சந்திப்பதால், இதை சாதாரணமாக நினைத்து அதற்கென எந்த சிகிச்சையும் மேற்கொள்வதில்லை.

இதய நோயால் போராடும் ஒரு வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தயவு செய்து நன்கொடை வழங்குங்கள்..

Signs You Shouldn’t Ignore Your Back Pain

ஒருவர் முதுகு வலியை எப்போதாவது சந்தித்தால் பரவாயில்லை. ஆனால் தாங்க முடியாத முதுகு வலியை பல நாட்களாக சந்தித்து, உட்கார, படுக்க அல்லது சௌகரியமாக நிற்க கூட முடியாமல் இருந்தால், அது உடலில் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதிலும் முதுகு வலியுடன் ஒருசில அறிகுறிகளையும் சந்தித்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

MOST READ: சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி தடுக்கி விழுவது

அடிக்கடி தடுக்கி விழுவது

முதுகு வலியுடன் உங்களால் ஒருசமநிலையில் இருக்க முடியவில்லையா? வயதான பெண்களுக்கு இது ஆஸ்டியோபோரோசிஸின் அறிகுறியாக இருக்கலாம். எளிமையாக கூற வேண்டுமானால், எலும்புகள் அதன் அடர்த்தியை இழந்து, எளிதில் எலும்பு முறிவை சந்திக்கும் நிலை தான் ஆஸ்டியோபோரோசிஸ். உடல் சமநிலையை பராமரிக்கவும், எளிதில் கீழே விழாமல் இருக்கவும் பிசியோதெரபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு பிசியோதெரபி மருத்துவர் அதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குவார்.

குடல் அல்லது சிறுநீர்ப்பை பிரச்சனைகள்

குடல் அல்லது சிறுநீர்ப்பை பிரச்சனைகள்

முதுகு வலி தவிர, சிறுநீர்ப்பை அல்லது குடல் பகுதிகளில் வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் மருத்துவரை உடனே தொடர்பு கொள்வது முக்கியம். குறிப்பாக வலி தீவிரமாக இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள். இது அரிய கியூடா ஈக்வினா நோய்க்குறியின் அடையாளமாக இருக்கலாம். இதற்கு சரியான மற்றும் உறுதியான பதிலை மருத்துவரால் மட்டுமே வழங்க முடியும்.

நொண்டி நடப்பது

நொண்டி நடப்பது

நீங்கள் முதுகு வலியுடன் நொண்டி நடக்கிறீர்களா? அப்படியானால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, என்ன செய்வதென்று கேளுங்கள். முடிந்தவரை இப்பிரச்சனையை சரிசெய்ய வேகமாக முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் பாதங்களில் உள்ள நரம்புகள் முழுமையாக சேதமடைந்து, வாழ்நாள் முழுவதும் நொண்டி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

ஒட்டுமொத்த உடல் வலி

ஒட்டுமொத்த உடல் வலி

உங்களுக்கு முதுகு வலி மட்டுமின்றி, காய்ச்சல், குளிர் மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கிறதா? அப்படியானால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இது உங்கள் உடல் எதற்காவது எதிர்வினையாற்றுகிறது என்பதற்கான அர்த்தமாக இருக்கலாம். சில சமயங்களில் இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் தீவிர நிலையில் இது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகவே இந்த அறிகுறிகளை சந்தித்தால் உங்கள் மருத்துவரை அணுகுவதே புத்திசாலித்தனம்.

கால்களில் வலி

கால்களில் வலி

உங்கள் முதுகு வலி பிட்டம் வழியாக கால்கள் அல்லது பாதங்களுக்கு கூட பரவலாம். இப்படி பரவினால், அது நரம்பு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இது தானாக சரியாகக்கூடும். அதற்காக அப்படியே விட்டு விடாமல், மருத்துவரை சந்திப்பது நல்லது. பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை. ஆனால், முதுகு மற்றும் வயிற்றுத் தசைகளை வலுப்படுத்த மசாஜ் மற்றும் பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளின் மூலம் பயனடைவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Shouldn’t Ignore Your Back Pain

Here are some signs you shouldn’t ignore your back pain. Read on...
Desktop Bottom Promotion