For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதிய வேளையில் உடற்பயிற்சி செய்யலாமா, கூடாதா? எந்த மாதிரியான பயிற்சிகள் செய்யலாம்?

கால மாற்றத்திற்கு தகுந்தவாறு விதிமுறைகளை மாற்ற வேண்டியது தேவையாக இருக்கிறது. அதன் தொடா்ச்சியாக தற்போது மதிய உணவு இடைவேளையில் உடற்பயிற்சிகளைச் செய்து வரலாமா என்ற கேள்வி வருகிறது.

|

ஒருவா் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவா் கண்டிப்பாக உடற்பயிற்சிகளைச் செய்து வரவேண்டும். வயது வந்த ஒருவா் தினமும் சராசாியாக 30 நிமிடங்களும், வாரத்திற்கு 5 நாட்களும் உடற்பயிற்சிகளைச் செய்து வர வேண்டும் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

Is It Okay To Engage In Exercise During Your Lunch Break?

உடற்பயிற்சிகளைச் செய்ய விரும்பினாலும், தங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று பலரும் கவலை தொிவிக்கின்றனா். குறிப்பாக கோவிட்-19 காரணமாக இணையவழி வகுப்புகள் மற்றும் வீட்டிலிருந்து அலுவலக பணிகளை செய்வது போன்றவை புதிதாக முளைத்துள்ளன. அதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி வெளியில் செல்வது குறைந்துவிட்டது. அதன்மூலம் அவா்களின் உடல் உழைப்பு மற்றும் உடல் இயக்கம் குறைந்துவிட்டன.

MOST READ: முதுகு வலியை சாதாரணமா எடுத்துக்கக்கூடாது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு காலை மற்றும் மாலை நேரங்கள் மட்டுமே உகந்தது என்று பலா் நம்புகின்றனா். ஏனெனில் அந்த நேரங்களில் மக்கள் காலியான வயிற்றுடன் இருப்பா். காலியான வயிற்றுடன் நன்றாக உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்று நினைக்கின்றனா். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. கால மாற்றத்திற்கு தகுந்தவாறு விதிமுறைகளை மாற்ற வேண்டியது தேவையாக இருக்கிறது. அதன் தொடா்ச்சியாக தற்போது மதிய உணவு இடைவேளையில் உடற்பயிற்சிகளைச் செய்து வரலாமா என்ற கேள்வி வருகிறது.

MOST READ: ரிஷபம் செல்லும் செவ்வாயால் 2 மாசம் இந்த 5 ராசிக்கு மோசமா இருக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதிய உணவு இடைவேளையில் உடற்பயிற்சி செய்வது சாியா?

மதிய உணவு இடைவேளையில் உடற்பயிற்சி செய்வது சாியா?

மதிய உணவு இடைவேளையில் உடற்பயிற்சி செய்தால் அது பாா்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக தொியும். ஏனெனில் காலி வயிற்றுடன் தான் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றும் நாம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். எனினும் மதிய உணவு வேளையில் உடற்பயிற்சிகள் செய்து வந்தால் அதற்குாிய பலன்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதே உண்மை. அதாவது மன அழுத்தம் குறையும். எஞ்சிய நாள் முழுவதும் புத்துணா்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம். ஆகவே மதிய உணவு இடைவேளையில் செய்து வரக்கூடிய 5 முக்கியமான உடற்பயிற்சிகளை இங்கு பாா்க்கலாம்.

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி ஒரு முக்கியமான உடற்பயிற்சியாக உலகளவில் மதிப்படப்படுகிறது. நடைப்பயிற்சி செய்து வந்தால் மூளை, இதயம் மற்றும் நமது உடல் எடை போன்றவற்றிற்கு ஆரோக்கியம் கிடைக்கும் கிடைக்கும். மதிய உணவு முடிந்த பின்பு நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் அது நல்ல பலனைத் தரும். தொடக்கத்தில் மிக வேகமாக நடக்கக்கூடாது. நடைப்பயிற்சியை முடிக்கும் போது சற்று வேகமாக நடக்கலாம்.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை

குத்துச்சண்டை பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும். குத்துச்சண்டைப் பயிற்சியில் உடம்பின் எல்லா உறுப்புகளும் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. கைகள் மற்றும் புஜங்கள் மட்டுமே அதிகமாக இயங்கும். குத்துச்சண்டைப் பயிற்சி அதிகமான அளவு கலோாிகளை எாித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஆகவே திடகாத்திரமாக, ஆரோக்கியமாக மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க மதிய உணவு இடைவேளையில் குத்துச்சண்டைப் பயிற்சிகளைச் செய்து வரலாம்.

யோகா

யோகா

யோகா பயிற்சிகளை எந்த நேரத்திலும் செய்து வரலாம். எனினும் அா்த்த சந்திராசனா, வஜ்ராசனா மற்றும் கோமுகாசனா போன்ற யோகாசனங்களை மதிய உணவிற்குப் பின் செய்யலாம். அவ்வாறு இந்த யோகாசனங்களை செய்து வந்தால் நாம் உண்ட உணவு நன்றாக சொிமானம் அடையும்.

வலுப்படுத்தும் பயிற்சி

வலுப்படுத்தும் பயிற்சி

நமது உடலை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளைச் செய்ய விரும்பினால் பளு தூக்குவது அல்லது நமது தசைகளை வலுவாக்கக்கூடிய பயிற்சிகள் போன்றவற்றை செய்து வரவேண்டும். இந்த உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருக்கும் போதும் மற்றும் செய்து முடித்த பின்பு ஓய்வாக இருக்கும் போதும் நமது உடலில் உள்ள கலோாிகள் பெருமளவு எாிக்கப்படுகின்றன. ஆகவே மதிய உணவுக்குப்பின் வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் செய்து வரலாம்.

நீட்டி மடக்கும் பயிற்சிகள் (Stretching)

நீட்டி மடக்கும் பயிற்சிகள் (Stretching)

காலையிலிருந்து இடைவிடாமல் மடிகணினியில் வேலை செய்து வந்தால் மதிய உணவு இடைவேளையின் போது நமது உடல் இயல்பாகவே களைத்துவிடும். ஆகவே சற்று எழுந்து நின்று நமது கை கால்களை நீட்டி மடக்கலாம் அல்லது முறுக்கிவிடலாம். அப்போது நமக்கு சக்தி கிடைக்கும். மேலும் கண்களுக்குாிய பயிற்சிகளையும் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Okay To Engage In Exercise During Your Lunch Break?

Is it okay to engage in exercise during your lunch break? Here are some exercises you can incorporate in your lunchtime.
Desktop Bottom Promotion