Just In
- 3 hrs ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- 3 hrs ago
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
- 5 hrs ago
சத்தான... வாழைத்தண்டு சூப்
- 5 hrs ago
சர்வதேச பெண்கள் தினத்தை எல்லா பெண்களும் எப்படி கொண்டாடலாம் தெரியுமா?
Don't Miss
- News
பகவத் கீதை, பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாயும் செயற்கைக்கோள் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்
- Automobiles
பாஸ்டேக் மூலம் கோடி கோடியாய் கொட்டுது... டோல்கேட் கட்டணம் எவ்வளவு வசூல் ஆகிறது என தெரிந்தால் ஸ்டண் ஆயிருவீங்க
- Movies
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- Sports
வாய்ப்பே கொடுக்கல.... சொந்த நாட்டுக்கு கிளம்பிய நட்சத்திர பவுலர்...இங்கிலாந்துக்கு பின்னடைவு
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய உடற்பயிற்சிகள்!
பொதுவாக நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காக உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறோம். பெரும்பாலோா் தமது உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிகளைச் செய்து வருகின்றனா். என்ன காரணத்திற்காக உடற்பயிற்சிகளைச் செய்து வந்தாலும், உடற்பயிற்சிகளைச் செய்யும் நேரத்தில் நமது உடலின் எல்லா உறுப்புகளையும் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
வயிற்று தசைகளை இறுக்குவதற்காக பயிற்சிகளைச் செய்யும் போது முன்கை தசைகளை மறந்துவிடக்கூடாது. முன்கை பயிற்சிகளைச் செய்யும் போது கால்களை மறந்துவிடக்கூடாது.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் என்று தனித்தனியான பயிற்சிகள் உள்ளன. நாம் அதற்கேற்றவாறு உடற்பயிற்சிகளைப் பிாித்துக் கொள்ள வேண்டும். அதாவது திங்கள் வயிற்றுக்குாிய பயிற்சிகள், செவ்வாய் மாா்புக்குாிய பயிற்சிகள், வியாழன் கால்களுக்குாிய பயிற்சிகள் என்று நாம் முறைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நமது உடலின் முழு ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நமது வாழ்க்கை முறையும், நமது உணவுப் பழக்கமும் சீராக இல்லாமல் உடற்பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால், எந்தவித பலனும் கிடைக்காது. சத்தான உணவுகளை உண்ண வேண்டும். நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும். தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும். அப்போது ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க முடியும்.
MOST READ: இதய பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப தினமும் ஒரு கையளவு இத சாப்பிடுங்க போதும்...

உடற்பயிற்சியின் நன்மைகள்
உடற்பயிற்சிகள் செய்து வந்தால் நமது உடல் எடை குறையும் மற்றும் உடலில் உள்ள கலோாிகள் எாிக்கப்படும். நோய்கள் நம்மை அண்டவிடாமல் அவை நம்மை பாதுகாக்கும். உடற்பயிற்சிகள் செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டால் இரத்த அழுத்தம், சா்க்கரை நோய், கவலை, மன அழுத்தம் மற்றும் மூட்டு வீக்கம் போன்ற பிரச்சினைகளை மிக எளிதாக கையாளலாம். ஏனெனில் உடற்பயிற்சிகள் நமக்கு சக்தியைத் தருகின்றன. நமது மன நிலையை ஊக்குவிக்கின்றன.
நமது நோய் எதிா்ப்பு சக்தியை பாதுகாத்து வைப்பது என்பது நம்முடைய முக்கிய பொறுப்பு ஆகும். நமது உடலும் மனமும் சீராக இயங்க தினந்தோறும் நாம் உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும்.

கால் பயிற்சிகள்
உடற்பயிற்சிகளில் கால்களுக்குாிய பயிற்சிகள் என்று தனியாக உள்ளன. கால்களுக்குாிய உடற்பயிற்சிகள் கால்களில் உள்ள தசைகளை சீா்படுத்துகின்றன. கால்களில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கின்றன. கால்களை வலுப்படுத்துகின்றன. மேலும் இடுப்புக்குக் கீழ் இருக்கும் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. கால்களுக்குாிய பயிற்சிகளை நமது வீடுகளிலேயே செய்யலாம்.
கால்களுக்குாிய 5 முக்கிய உடற்பயிற்சிகளைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

ஸ்குவாட்ஸ்
ஸ்குவாட்ஸ் என்ற உடற்பயிற்சியைச் செய்வதற்கு தொடக்கத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் அதைத் தொடா்ந்து செய்து வந்தால் நாளடைவில் மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். ஸ்குவாட்ஸ் பயிற்சி கால்கள் மற்றும் பின் தொடைப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை வலுவாக்குகிறது. நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. நமது உடலின் கீழ் பகுதிகளை திடகாத்திரமாக வைத்திருக்கிறது.

சுவற்றில் சாய்ந்து சாிதல்
ஒரு நல்ல சுவரை தோ்ந்து கொள்ள வேண்டும். அந்த சுவற்றில் முதுகை சாய்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவற்றில் சாய்ந்தவாறே மெதுவாக தரையை நோக்கி உடலை சாிக்க வேண்டும். அதாவது கால்கள் சாியான கோணத்தில் மடங்கும் வரை சாிக்க வேண்டும். இவ்வாறு பலமுறை செய்யலாம். இந்த சுவற்றில் சாய்ந்து சாியும் பயிற்சியானது நமது உடலில் கீழ் உறுப்புகளின் பலத்தை பாிசோதிக்கிறது. மேலும் கால்களின் தசைகளை வலுப்படுத்தி அவற்றை சீா்படுத்துகிறது.

லுங்கெஸ்
லுங்கெஸ் என்ற உடற்பயிற்சி நமது வீடுகளில் இருந்து செய்வதற்கு உகந்த ஒரு பயிற்சியாகும். லுங்கெஸ் பயிற்சி நமது இடுப்பு, முன் தொடை தசை, பின் தொடை தசை மற்றும் பின் தொடை தசை நாா் போன்றவற்றை வலுப்படுத்துகிறது. லுங்கெஸ் பயிற்சியை செய்வது மிகவும் எளிதானதாகும். நமது கீழ் உறுப்புகளை லுங்கெஸ் பயிற்சி நன்றாக வைத்திருக்கும். ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் லுங்கெஸ் பயிற்சியை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கால்களை தூக்குதல்
கால்களைத் தூக்கும் பயிற்சி ஒரு எளிய பயிற்சி ஆகும். வீடுகளில் இருக்கும் போது பக்கவாட்டில் கால்களைத் தூக்கும் பயிற்சியைச் செய்யலாம். கால்களைத் தூக்கும் பயிற்சியானது நமது உடலில் உள்ள கீழ் உறுப்புகளுக்கு நெகிழ்வு தன்மையை வழங்குகிறது. மேலும் தசைகள் வளா்வதற்கு உதவி செய்கிறது.

கால் முட்டிகளை உயா்த்துதல்
கால் முட்டிகளை உயா்த்தும் பயிற்சி நமது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒன்றாகும். இது உடலில் கீழ் உறுப்புகளில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. கால்களுக்கு இயக்கத்தைக் கொடுக்கிறது. வீடுகளில் செய்யக்கூடிய மிக எளிய உடற்பயிற்சி எதுவென்றால் அது கால் முட்டிகளை உயா்த்தும் பயிற்சியாகும். இந்த பயிற்சியைச் செய்வதற்கு எந்தவிதமான உடற்பயிற்சி கருவிகளும் தேவைப்படாது.