For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது மூளைச் செல்களை அழித்துவிடும்...

தற்போது நாம் சாப்பிடும் பல உணவுகள் நமது மூளையின் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி, நினைவாற்றல் மற்றும் மனநிலையை பாதித்து, ஞாபக மறதி என்னும் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

|

நமது உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இது தான் இதயத் துடிப்பு, சுவாசிப்பது மற்றும் உடலின் அனைத்து உறுப்புக்களையும் செயல்பட வைக்கிறது. எனவே உடலுறுப்புக்கள் அனைத்தும் அவற்றின் வேலைகளை சரியாக ஒழுங்காகவும் செய்ய வேண்டுமானால், மூளை ஆரோக்கியமாக செயல்பட வேண்டும். அதற்கு மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

Foods That Kill Brain Cells In Tamil

ஆனால் தற்போது நாம் சாப்பிடும் பல உணவுகள் நமது மூளையின் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி, நினைவாற்றல் மற்றும் மனநிலையை பாதித்து, ஞாபக மறதி என்னும் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் உங்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், மூளை செல்களை அழிக்கும் உணவுகள் எவையென்பதை அறிந்து, அவற்றை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். கீழே மூளை செல்களை சேதப்படுத்தும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகளை இதுவரை அதிகம் உட்கொண்டு வந்தால், உடனே அதை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உடல் பருமனை அதிகரிப்பது மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. அதுவும் சர்க்கரையை நீண்ட நாட்களாக தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது பல்வேறு வகையான நரம்பியல் பிரச்சனைகளை உருவாக்கி, நினைவாற்றலை அழிக்கத் தொடங்குகிறது. முக்கியமாக சர்க்கரையானது ஒருவரது கற்கும் திறனை பாதிக்கக்கூடியது. எனவே உங்களின் மூளை ஆரோக்கியமாக செயல்பட விரும்பினால், சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

செயற்கை சுவையூட்டிகள்

செயற்கை சுவையூட்டிகள்

உடல் எடையைக் குறைக்க மக்கள் முயற்சிக்கும் போது, பலரும் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை சுவையூட்டிகளை உட்கொள்வதை சிறந்ததென நினைக்கிறார்கள். ஆனால் செயற்கை சுவையூட்டிகளிலும் கலோரிகள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை விட, தீங்கு விளைவிக்கக்கூடியது. செயற்கை சுவையூட்டிகளை நீண்ட காலமாக தொடர்ந்து அதிகளவில் உட்கொள்ளும் போது, அது மூளையை சேதப்படுத்துவதோடு, அறிவாற்றல் திறனையும் பாதிக்கும். எனவே மூளை ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால் செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.

ஜங்க் உணவுகள்/ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

ஜங்க் உணவுகள்/ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

மாண்ட்ரீல் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஜங்க் உணவுகள் மூளையில் உள்ள நொதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, மன இறுக்கம், பதற்றம் போன்றவற்றை உண்டாக்குவது தெரிய வந்தது. ஜங்க் உணவுகளானது டோபமைன் என்னும் மனநிலையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கிறது. டோபமைன் மனநிலையை சந்தோஷமாக வைப்பதைத் தவிர, அறிவாற்றல் செயல்பாடு, கற்கும் திறன், விழிப்புணர்வு, நினைவாற்றல் போன்றவற்றையும் மேம்படுத்துகிறது. எனவே உங்களின் நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஜங்க் உணவுகளை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் பொரித்த உணவுகள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் பொரித்த உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்திலும் கெமிக்கல்கள், சாயங்கள், செயற்கை சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருட்கள் போன்றவை உள்ளன. இவை அனைத்துமே ஒருவரது நடத்தை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கின்றன. குறிப்பாக எண்ணெயில் பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளானது மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக அழிப்பதோடு, மத்திய நரம்பு மண்டலத்தையும் பாதித்து, மூளை நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

உப்புள்ள உணவுகள்

உப்புள்ள உணவுகள்

உப்பு அதிகம் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அதே உப்புள்ள உணவுகள் ஒருவரது அறிவாற்றல் செயல்பாட்டை பாதித்து, சிந்திக்கும் திறனையும் பாதிக்கலாம். எனவே உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Kill Brain Cells In Tamil

Here are some foods that kill brain cells and weaken your memory and focus. Read on to know more...
Story first published: Saturday, January 21, 2023, 17:35 [IST]
Desktop Bottom Promotion