Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
உடம்பில் வைட்டமின் சி ரொம்ப கம்மியா இருப்பதைக் குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வைட்டமின் சி என்னும் அஸ்கார்பிக் அமிலம் மிகவும் முக்கியமாகும். உடலுக்கு இது மிகவும் அத்தியாவசியமானது. இது தான் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வைட்டமின் சி என்னும் அஸ்கார்பிக் அமிலம் மிகவும் முக்கியமாகும். உடலுக்கு இது மிகவும் அத்தியாவசியமானது. இது தான் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. ஆய்வுகளின் படி, அமெரிக்க மக்கள் பலருக்கு வைட்டமின் சி குறைபாடு இருப்பதாக கூறுகிறது. ஆனால் இந்த வைட்டமின் குறைபாடு பல தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

கீழே ஒருவருக்கு வைட்டமின் சி உடலில் மிகவும் குறைவாக இருந்தால் நமது உடலில் தெரிய வரும் சில ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனே அந்த குறைபாட்டை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

மோசமான மனநிலை
சொன்னால் நம்பமாட்டீர்கள், வைட்டமின் சி குறைவாக இருந்தால், அது ஒருவரது மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆய்வு ஒன்றில், மன கவலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வைட்டமின் சி சப்ளிமெண்டுகளை எடுத்த பின்னர் அவர்களது மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

காய்ச்சல் மற்றும் சளி
வைட்டமின் சி வெள்ளையணுக்களின் உற்பத்திற்கு ஆதரவளிக்கிறது. மேலும் இது உடலைத் தாக்கும் பல கிருமிகளுக்கு வெறுப்பை உண்டாக்கக்கூடியவை. எனவே உங்களுக்கு காய்ச்சல், சளி அல்லது தொண்டையில் ஏதேனும் கரகரப்பு போன்றவை திடீரென்று ஏற்பட்டால், உடலுக்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது என்று அர்த்தம்.

மூட்டுக்களில் வீக்கம் மற்றும் வலி
மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கத்ததைக் கண்டால், அது முடக்கு மூட்டு அழற்சியின் அறிகுறியாகும். வைட்டமின் சி தேவைப்படுபவர்களுக்கு தான் முடக்கு மூட்டு அழற்சி ஏற்படுவதற்கான ஆபத்து பல மடங்கு அதிகம் உள்ளது என்று ஆர்த்ரிடிஸ் ஃபவுண்டேஷன் பரிந்துரைக்கிறது.

காயங்கள் தாமதமாக குணமாவது
உங்களுக்கு காயங்கள் அல்லது அறுவை சிகிச்சை காயங்கள் சீக்கிரம் குணமாகாமல் இருந்தால், அதற்கு ஒரு காரணமாக உடலில் போதுமான வைட்டமின் சி இல்லாததாக இருக்கலாம். ஏனெனில் இந்த வைட்டமின் தான் இணைப்புத் திசுக்களை பலப்படுத்தவும், சரிசெய்யவும் உதவுகிறது.

சிராய்ப்பு
வைட்டமின் சி குறைவாக இருப்பது இரத்த நாளங்களை பலவீனப்படுத்துகிறது. உங்களுக்கு அடிக்கடி சிராய்ப்புகள் ஏற்பட்டால், அதற்கு இந்த வைட்டமின் பற்றாக்குறையும் ஓர் காரணமாக இருக்கலாம். எனவே இந்நேரத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

வறட்சியான சருமம்
குளிர்காலத்தில் சருமம் வறட்சியடைவது சாதாரணம். ஆனால் உங்கள் சருமத்தில் திடீரென்று வறட்சி அதிகரித்து, சிவந்தும், கடினமாகவும் இருப்பதை உணர்ந்தால், உங்களுக்கு வைட்டமின் சி தேவைப்படலாம். வைட்டமின் சி குறைபாடு கெரடோசிஸ் பிலாரிஸைத் தூண்டக்கூடும். இது இளைஞார்களிடையே காணப்படுவது இயல்பானது. இருப்பினும் ஒவ்வொரு வயதிலும் இது நிகழலாம்.
இந்த நிலையால் தொடைகள், மேல் கைகள், கன்னங்கள் போன்ற இடங்களில் விரும்பத்தகாத திட்டுக்கள் காணப்படும். இது எந்த ஒரு வேதனையையும் தராது. இருப்பினும், இந்த திட்டுக்கள் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் க்ரீம்களை உபயோகப்படுத்துவார்கள்.

மூக்கில் இரத்தக்கசிவு
இரத்த நாளங்களை வலுப்படுத்த போதுமான வைட்டமின் சி எடுத்துக் கொள்ளுங்கள். மூக்கானது மிதமான நரம்புகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. மேலும் எந்த ஒரு பற்றாக்குறையும் மூக்கில் இரத்தக்கசிவை உண்டாக்கக்கூடும். மூக்கில் இரத்தக்கசிவு ஏற்படுவது எபிஸ்டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது ஸ்கர்வியின் பொதுவான வெளிப்பாடாகும்.

வறட்சியான முடி மற்றும் முடி வெடிப்புக்கள்
வைட்டமின் சி முடியையும், அதன் அஸ்திவாரத்தையும் பலப்படுத்துகிறது. வைட்டமின் சி குறைவாடு முடி வறட்சியை உண்டாக்குவதோடு, முனைகளில் வெடிப்புக்களை உண்டாக்குகிறது. பொதுவாக உடலில் ஏற்படும் எந்த ஒரு பற்றாக்குறையும் மிதமான முடி வளர்ச்சி மற்றும் ஆண் முறை வழுக்கைக்கு வழிவகுக்கும்.

ஈறு வீக்கம் மற்றும் இரத்தக்கசிவு
வைட்டமின் சி வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இது தான் எபிதிலியம் திசுக்களை வலுப்படுத்துகிறது. இந்த திசு தான் நுண் கிருமிகளை எதிர்த்து ஒருவித பாதுகாப்பை வழங்குகிறது. வைட்டமின் சி குறைவாக இருந்தால், அது ஈறுகளில் வீக்கத்தை உண்டாக்குவதோடு, பல ஈறு பிரச்சனைகளையும் உண்டாக்கும். எனவே ஈறு பிரச்சனைகளை சந்தித்தால், உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

எலும்பு பிரச்சனைகள்
வைட்டமின் சி திட எலும்புகளை ஒருங்கிணைக்கிறது. மேலும் எந்த ஒரு பற்றாக்குறையும் எலும்புகளில் பிரச்சனையைத் தூண்டும். வைட்டமின் சி உடலில் குறையும் போது, எலும்புகள் சக்தி இழந்துவிடும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு உடைவதற்கான அபாயம் போன்றவை அதிகரிக்கும்.

உடல் பருமன்
நீங்கள் எடை அதிகரித்திருக்கிறீர்களா? வைட்டமின் சி கொழுப்பு செல்களில் இருந்து வரும் கொழுப்பை வழிநடத்துகிறது, ஹார்மோன்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இந்த வைட்டமின் குறையும் போது, உடல் எடையைக் பராமரிப்பதில் சிரமத்தை சந்திப்பீர்கள்.



Click it and Unblock the Notifications