For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல பழக்கம் என்று நினைக்கும் இதெல்லாம் மன சுழற்சி நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்பது தெரியுமா?

உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, வீட்டை சிறந்த முறையில் பராமரிப்பது போன்றவை ஆரோக்கியமான பழக்கவழக்கம். ஆனால் இந்த பழக்கம் அளவுக்கு மீறி அதிகமாகும் போது சிக்கலாக மாறுகிறது.

|

உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, வீட்டை சிறந்த முறையில் பராமரிப்பது போன்றவை ஆரோக்கியமான பழக்கவழக்கம். ஆனால் இந்த பழக்கம் அளவுக்கு மீறி அதிகமாகும் போது சிக்கலாக மாறுகிறது. கைகளை பலமுறை கழுவுவது, வீட்டை எப்போதும் சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது, ஆடைகள் உள்ள அலமாரியை எப்போதும் அடுக்கி வைத்துக் கொண்டே இருப்பது போன்றவை ஒருவித பதட்டக் கோளாறின் அறிகுறியாகும். இதனை அப்சசிவ் கம்பல்சிவ் டிஸார்டர் (OCD) என்னும் மன சுழற்சி நோய்/எண்ண சுழற்சி நோய் என்று குறிப்பிடுவார்கள்.

Early Signs Of Obsessive Compulsive Disorder (OCD)

இந்த பாதிப்பைக் கொண்ட நபர்களுக்கு அதீத எண்ண ஓட்டம் மற்றும் விடாப்பிடியான எண்ணம் போன்றவை இருப்பதால் வாழ்க்கையில் தேவையற்ற சிக்கல் உண்டாகிறது. ஓசிடி பாதிப்பின் அறிகுறி மெதுவாக தோன்றினாலும், தொடக்க நிலையில் சரியான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் இந்த கோளாறில் இருந்து எளிதில் விடுபட முடியும். ஓசிடிக்கான ஆரம்ப அறிகுறிகள் சில உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி கைகளைக் கழுவுவது

அடிக்கடி கைகளைக் கழுவுவது

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது ஒரு ஆரோக்கியமான பழக்கமாகும். இதன் மூலம் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று குறைக்கப்படும். ஆனால் அதிக முறை கைகளை சுத்தம் செய்வது என்பது ஓசிடியின் அறிகுறியாக இருக்கலாம். மிக அதிகமான முறை கைகளைக் கழுவுவது, சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது போன்றவை சற்று கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியா தாக்கம் குறித்த பயத்தின் காரணமாக உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஓசிடியின் அறிகுறியாக இருக்கலாம்.

பலமுறை பரிசோதித்துப் பார்ப்பது

பலமுறை பரிசோதித்துப் பார்ப்பது

எதையும் பலமுறை பரிசோதித்து பார்ப்பது - கதவு சரியாக பூட்டி இருக்கிறதா என்று பார்ப்பது, கேஸ் சிலிண்டர் சரியாக மூடி இருக்கிறதா என்று அடிக்கடி சரி பார்ப்பது போன்றவை உங்களுக்குள் எதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு செயலையும் 3-4 மணிநேரத்திற்கு ஒரு முறை சரி பார்ப்பது என்பது ஓசிடி பாதிக்கப்பட்டவர்களின் பழக்கமாகும். காயம் ஏற்படும் என்ற எண்ணம் அல்லது அதீத எண்ண ஓட்டம் ஆகியவற்றின் காரணமாக இந்த பழக்கம் உண்டாகலாம்.

ஒரே வழிமுறையை பின்பற்றுவது

ஒரே வழிமுறையை பின்பற்றுவது

ஓசிடி பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை அடிப்படையில் செயல்களை செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு மாடிப்படியில் ஏறும் போது படிகளை எண்ணுவது, அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்வது போன்றவற்றைப் பின்பற்றுவார்கள். இந்த குணநலன்கள் பொதுவாக மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம். குறிப்பிட்ட செயலை குறிப்பிட்ட நேரத்தில் செய்யாமல் போனால், தவறாக ஏதாவது நடக்கலாம் என்று அவர்கள் நினைப்பார்கள்.

அதீத ஒழுங்குபடுத்தும் தன்மை

அதீத ஒழுங்குபடுத்தும் தன்மை

ஓசிடி பாதிக்கப்பட்டவர்கள் அதீத ஒழுங்குபடுத்தும் தன்மையுடன் இருப்பார்கள். எல்லா செயல்களையும் ஒரு குறிப்பிட்ட பாங்கில் செய்வார்கள். மேஜையின் இடது பக்கத்தில் மட்டுமே போனை வைத்திருப்பது, தண்ணீர் பாட்டிலை வலது பக்கத்தில் மட்டுமே வைத்திருப்பது என்று எந்த ஒரு செயலையும் மாற்றி செய்யவே மாட்டார்கள். அவர்களை சுற்றி வைத்திருக்கும் பொருட்களை இடம் மாற்றி வைக்க மாட்டார்கள், ஒருவேளை அந்த பொருட்கள் மாற்றி வைக்கப்பட்டால் அது குறித்து பதட்டப்படுவார்கள்.

கச்சிதத்தை விரும்புவார்கள்

கச்சிதத்தை விரும்புவார்கள்

ஓசிடி பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையையும் கச்சிதமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுடைய தோற்றம் மற்றும் உடற்பகுதி குறித்து மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்களுடைய சிரிப்பு அல்லது முகத்தின் உறுப்புகள் கவர்ச்சியற்று இருப்பதாக உணர்ந்தால், அது குறித்து பொது இடங்களில் கவனத்துடன் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Early Signs Of Obsessive Compulsive Disorder (OCD)

Here are some early signs of Obsessive Compulsive Disorder (OCD) in tamil. Read on...
Desktop Bottom Promotion