For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு சிட்ரஸ் அழற்சி இருக்கா, இல்லையானு தெரியுமா? முதல்ல அத தெரிஞ்சு வச்சுகோங்க…

சிட்ரஸ் பழங்களில் நீரின் அளவும் அதிகம் என்பதால் உடலில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. ஆனாலும், சிலருக்கு இந்த பழங்கள் என்றாலே அழற்சி. இங்கே அழற்சி என்று கூறப்படுவது சிட்ரஸ் அழற்சி.

|

பழங்களிலேயே மிகவும் சத்து நிறைந்த, உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியது என்றால் சிட்ரஸ் பழங்களை கூறலாம். சிட்ரஸ் பழங்களில் அதிக அளவிலான வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கும். அவை, வைரஸ் தொற்றுகள் மற்றும் பருவகால நோய் தொற்றுகளுடன் போராடி உடலை காக்கக்கூடியவை. ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காப்பாற்றுகிறது. அதுமட்டுமல்லாது, சிட்ரஸ் பழங்களில் நீரின் அளவும் அதிகம் என்பதால் உடலில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

Citrus Allergy: Symptoms, Foods to Avoid

ஆனாலும், சிலருக்கு இந்த பழங்கள் என்றாலே அழற்சி. இங்கே அழற்சி என்று கூறப்படுவது சிட்ரஸ் அழற்சி. சிட்ரஸ் இருக்கும் பொருட்களை உட்கொண்டாலே அவர்களுக்கு ஏதாவது ஒரு அழற்சி அறிகுறி தென்பட தொடங்கிவிடும். இந்த வகை அழற்சி மிகவும் அரிதானது தான். வாருங்கள் சிட்ரஸ் அழற்சி குறித்து மேலும் சில தகவல்களை தெரிந்து கொள்வோம். அப்போது தான் நமக்கு சிட்ரஸ் அழற்சி உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் அழற்சியின் அறிகுறிகள்:

சிட்ரஸ் அழற்சியின் அறிகுறிகள்:

சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகோ அல்லது அதன் சாற்றை பருகிய பிறகோ, சரும அரிப்பு அல்லது தொண்டை எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் உங்களுக்கு சரும அழற்சி இருக்கலாம். இங்கே சிட்ரஸ் அழற்சியின் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உங்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

* சிட்ரஸ் பழத்தை சாப்பிட்ட பிறகு உதடுகள், நாக்கு மற்றும் தொண்டையில் கடுமையான அரிப்பு மற்றும் கூச்ச உணர்வு

* ஈறுகள் மற்றும் உதடுகளின் வீக்கம் மற்றும் சிவத்தல்

* சிட்ரஸ் சாறு அல்லது தோலை தொட்டவுடன் சரும அரிப்பு

* அரிப்பு, தோல் சிவத்தல்

* சிட்ரஸ் பழங்களின் தொடர்பு கொண்ட பிறகு சருமத்தில் வீக்கம் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுதல்

* உயிருக்கு ஆபத்தான அனாபிலாக்ஸிஸ் அறிகுறிகள்

* வாய் மற்றும் தொண்டை வீக்கம்

* வெளிரிய தோல்

* படை

* ஆஸ்துமா

* வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு

* குறைந்த இரத்த அழுத்தம்

மேலே குறிப்பிட்டப்பட்டுள்ளவற்றில் எதையாவதை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவ உதவியை பெறுவது நல்லது. குறிப்பாக அனாபிலாக்ஸிஸ் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

சிட்ரஸ் அழற்சிக்கான காரணங்கள்

சிட்ரஸ் அழற்சிக்கான காரணங்கள்

அழற்சி என்பது ஒரு பொருளை உங்கள் உடல், தவறுதலாக விரோதமாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அந்த பொருள் உடலினுள் காணப்படும் போது ஒவ்வாமை தூண்டப்படுகிறது. அழற்சி ஏற்படுத்தும் பொருளை எதிர்த்து உடல் போராடும் பட்சத்தில் தான் இதுபோன்ற அறிகுறிகள் போன்றவை எல்லாம் உண்டாகின்றன. யாருக்கெல்லாம் மகரந்தத்தில் அழற்சி இருக்கிறதோ, அவர்களெல்லாம் சிட்ரஸ் அழற்சியால் பாதிக்கப்படுகின்றனர்.

சிட்ரஸ் அமிலம் இருக்கும் எந்த ஒரு பொருளை தொட்டாலோ, சுவைத்தாலோ, முகர்ந்தாலோ உடனே உடலில் எதிர்வினையை காட்டிவிடும். இருப்பினும், சிட்ரஸ் பழத்தில் காணப்படும் சிட்ரிக் அமிலம் இத்தகைய அழற்சி ஏற்படுத்துவது கிடையாது. சிட்ரிக் அமிலமானது புளிப்பு சுவையை கொடுக்கக்கூடிய ஒன்றாக மட்டுமே செயல்படுகிறது.

பெரும்பாலானவர்களுக்கு இந்த அழற்சி மிகவும் மிதமானதாகவே இருக்கும். ஒரு சிலருக்கும் மட்டுமே அனாபிலாக்ஸிஸ் போன்ற மிகவும் ஆபத்தான நிலை உண்டாகக்கூடும், அதுபோன்ற தருணங்களில் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

சிட்ரஸ் அழற்சிக்கான காரணங்களும்.. தூண்டுதல்களும்..

சிட்ரஸ் அழற்சிக்கான காரணங்களும்.. தூண்டுதல்களும்..

குறுக்கு-வினைத்திறன்

சிட்ரஸ் அழற்சிகளில் பெரும்பாலானவை மகரந்த ஒவ்வாமைகளால் தான் ஏற்படுகின்றன, அவை குறுக்கு-வினைத்திறனால் ஏற்படுகின்றன. சிட்ரஸ் பழங்கள் மற்றும் மகரந்தத்தில் சில புரதங்கள் காணப்படும். அந்த புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மகரந்த ஒவ்வாமை கொண்ட ஒருவர் சிட்ரஸ் பழத்தை உட்கொள்ளும் போது, பகிரப்பட்ட புரதத்தின் காரணமாக, அவற்றை மகரந்தம் என்று உடல் தவறாகக் கருதி வினைபுரியும். மகரந்தம் மற்றும் புல் ஆகியவற்றால் ஒவ்வாமை உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்களிலும் ஒவ்வாமை கொண்டவராக இருப்பர்.

லிமோனேன் ஒவ்வாமை

லிமோனேன் ஒவ்வாமை

சிட்ரஸ் பழ தோல்களில் காணப்படும் ஒரு வேதிப்பொருளால் ஏற்படக்கூடிய ஒரு வகை ஒவ்வாமை இது. இந்த ஒவ்வாமை உள்ளவர் ஒரு சிட்ரஸ் பழத்தின் தோலைத் தொட்டவுடன் சரும அழற்சியின் அறிகுறிகள் தென்படும். ஆனால், இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் சாத்துக்குடி ஜூஸை தாராளமாக குடிக்கலாம்.

சிட்ரஸ் அழற்சி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சிட்ரஸ் அழற்சி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சிட்ரஸ் ஒவ்வாமை இருந்தால், அவர் சிட்ரஸ் பழங்கள், தோல்கள் மற்றும் சாறு ஆகியவற்றிலிருந்து சற்று விலகியே இருக்க வேண்டியது அவசியம்.

* ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை சாறு அல்லது லைம் ஜூஸ் போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளைத் தவிர்க்கவும்.

* பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகளில் சிட்ரஸ் அமிலம் சேர்க்கப்பட்டிருக்கக்கூடும். எனவே, அவற்றை பருகுவதற்கு முன்பு பாக்கெட் லேபிளை சரிபார்ப்பது சிறந்தது.

* ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் சீவி உணவுகளில் பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிர்த்திடவும். அவை கூட ஒவ்வாமையை தூண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Citrus Allergy: Symptoms, Foods to Avoid

Citrus allergy or allergy to citrus foods is rare but people who are allergic to them may suffer from other health complications as well.
Desktop Bottom Promotion