Latest Updates
-
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது!
வெறும் வயிற்றில் முந்திரியை தேனுடன் சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதம் என்ன தெரியுமா?
முந்திரியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம். முந்திரியில் உள்ள மக்னீசியம் உடலில் செரடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
உங்களுக்கு முந்திரி ரொம்ப பிடிக்குமா? முந்திரி சாப்பிட்டால் மனச்சோர்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? வைட்டமின் பி12 அதிகம் நிறைந்தது தான் முந்திரி. இது மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இன்றைய வாழ்க்கையில் மனச்சோர்வு பொதுவான பிரச்சனையாக உள்ளது. போட்டி மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையாமல் மனச்சோர்வு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்த சூழ்நிலையில் முந்திரியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம். முந்திரியில் உள்ள மக்னீசியம் உடலில் செரடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது. செரடோனின் என்னும் கெமிக்கல் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள மிகவும் முக்கியமானது. அதுமட்டுமின்றி, முந்திரியில் புரோட்டீன் அதிகளவு உள்ளது. இதில் உள்ள காப்பர் நொதி செயல்பாடு, ஹார்மோன் உற்பத்தி, மூளை செயல்பாடு போன்றவற்றை கையாள உதவுகிறது.

முந்திரியின் இதர நன்மைகள்
முந்திரியின் நன்மைகள் இதோடு நின்றுவிடவில்லை. இது வேறு பல நோய்களுக்கும் இன்றியமையாத மருந்தாக விளங்குகிறது.
* முந்திரியில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
* முந்திரியின் பாலை சருமத்தில் தடவி வந்தால், சருமம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்.
* தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், முந்திரியை தினமும் உட்கொள்வது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
* இது தவிர, முந்திரியில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற பல நன்மை பயக்கும் சத்துக்கள் உள்ளன. இதன் காரணமாக இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில், புற்றுநோயைத் தடுப்பதில் மற்றும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மனச்சோர்வு மன ஆராக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
மனச்சோர்வு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு சோகமும் மனச்சோர்வு அல்ல. ஆனால் நீங்கள் எந்த வேலையும் செய்ய விரும்பாமல் இருந்தாலோ அல்லது எந்த வேலையை செய்யும் போது சந்தோஷம், சோகம் எதையும் உணராமல் இருந்தால், நீங்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். மனச்சோர்வு மன ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும் இது இதயம் தொடர்பான மற்றும் மூளை தொடர்பான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

மனச்சோர்வால் ஏற்படும் நோய்கள்
தொடர்ச்சியான மன அழுத்தம் பல மனநல கோளாறுகளின் அபாயத்தை அதிகரித்து, பல உடல்நல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இப்போது மனச்சோர்வால் வரக்கூடிய நோய்கள் எவையென்று காண்போம்.

உடல் பருமன்
ஆய்வு ஒன்றில் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மனச்சோர்வு இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மனச்சோர்வடைந்த குழந்தைகள் செயலற்ற, உடல் பருமனுடன் மற்றும் புகைப்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இது இளமைப் பருவத்தில் இதய நோயை உண்டாக்கும். இந்த ஆராய்ச்சியானது அமெரிக்காவின் மெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் உளவியலில் மேற்கொள்ளப்பட்டது.

இளமையிலேயே வயதாவது
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிமாக வயதாவதற்கான ஆபத்து உள்ளது. இது புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. Post-Traumatic Stress Disorder (PTSD) என்பது கடுமையான மனச்சோர்வு, கோபம், தூக்கமின்மை, உணவுப்பழக்க நோய்கள் மற்றும் பொருள் துஷ்பிரயோகம் போன்ற மனநல கோளாறுகளுடன் தொடர்புடைய நிலை ஆகும்.

டிமென்ஷியா
ஆய்வு ஒன்றில், மனச்சோர்வு உள்ளவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படுவதற்கான அபாயம் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. டிமென்ஷியா என்பது ஒருவரின் மன திறன், ஆளுமை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது. டிமென்ஷியாவானது ஒருவரின் நினைவாற்றலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த உண்மைகளானது அமெரிக்க இதழான நியூராலஜியில் வெளியிடப்பட்டன.

சர்க்கரை நோய்/நீரிழிவு
மனச்சோர்வு சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். பல வருடங்களாக சர்க்கரை நோய்க்கு மூல காரணமாக இருப்பது மனச்சோர்வாக நம்பப்பட்டது. அதோடு பல்வேறு ஆய்வுகளின் முடிவைப் பார்க்கும் போது, மனச்சோர்வு சிக்கலை சிக்கலாக்குவதாக சுட்டிக் காட்டுகின்றன. சர்க்கரை நோய்க்கு பின்னால் கவலை மற்றும் மன அழுத்தம் இருப்பதாக நிபுணர்களும் நம்புகிறார்கள். ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் சராசரி மனிதனை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

இதய நோய்
குழந்தைப் பருவத்தில் மனச்சோர்வு இருப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மனச்சோர்வடைந்த குழந்தைகள் செயலற்ற மற்றும் பருமனானவர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். மேலும் இது இளமை பருவத்தில் இதய நோயை ஏற்படுத்தும்.

காது கேளாமை
சமீபத்திய ஆராய்ச்சி காது கேளாமை தொடர்பான புதிய தகவல்களின் ஒரு பகுதியைக் கண்டறிந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி, மனச்சோர்வில் உள்ளவர்களுக்கு, காது கேளாமைக்கான ஆபத்து அதிகம் உள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், விஞ்ஞானிகள் ஆண்களையும், பெண்களையும் ஆய்வு செய்தனர். அதில் மனச்சோர்வின் விளைவு ஆண்களை விட பெண்கள் மீது அதிகம் இருந்தது தெரிய வந்தது.



Click it and Unblock the Notifications