For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

நீர் விரதம் (Water Fasting) இருப்பதன் மூலம், உடல் சுத்தமாகும், எடை குறையும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும். ஆனால் நீர் விரதத்தை மேற்கொள்வதால் நன்மை கிடைப்பது போன்றே தீமைகளும் உள்ளன.

|

உடலின் மெட்டபாலிசத்தை மீட்டமைக்க சிறந்த வழி விரதம் இருப்பதாகும். அதிலும் ஒருவர் நீர் விரதம் (Water Fasting) இருப்பதன் மூலம், உடல் சுத்தமாகும், எடை குறையும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும். ஆனால் நீர் விரதத்தை மேற்கொள்வதால் நன்மை கிடைப்பது போன்றே தீமைகளும் உள்ளன.

Benefits And Dangers Of Water Fasting

உங்களுக்கு நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், எப்படி அந்த நீர் விரதத்தை மேற்கொள்வது, யாரெல்லாம் இந்த விரதத்தை மேற்கொள்ளக்கூடாது மற்றும் நீண்ட நாட்கள் பின்பற்றினால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக காண்போம் வாருங்கள்.

ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா? அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீர் விரதம் என்றால் என்ன?

நீர் விரதம் என்றால் என்ன?

நீர் விரதம் என்பது ஒரு வகையான விரதம். இந்த விரதத்தின் போது வெறும் நீரை மட்டுமே பருக வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் 24 மணிநேரம் முதல் 72 மணிநேரம் வரை மேற்கொள்ளலாம்.

ஆனால் நீர் விரதத்தை ஒருவர் மேற்கொள்வதாக இருந்தால், அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கீழே உங்களுக்கான முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

இரத்த அழுத்தம் குறையும்

அளவுக்கு அதிகமாக உப்பு அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளை உட்கொண்டதால், நிறைய பேர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறப்பான வழி நீர் விரதம் மேற்கொள்வது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் உச்சக்கட்டதில் உள்ள 68 பேர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நீர் விரதத்தை மேற்கொண்டதில், 82% இரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறிப்பட்டது.

மற்றொரு ஆய்வில் உயர் இரத்த அழுத்தம் உள்ள 174 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் நீர் விரதம் மேற்கொண்டதன் முடிவில், 90% மக்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை வெற்றிகரமாக கைவிட்டனராம். அந்த அளவில் அவர்களது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீர் விரதம் மேற்கொண்டால், உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும். இதன் விளைவாக உடல் எடை குறையும். அதோடு பல்வேறு வகையான இதய நோய்களின் அபாயமும் குறையும்.

அடிக்கடி விரதம் இருப்பது, உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும், லெப்டின் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகளின் அளவுகள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறையும்

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறையும்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கெட்ட உணவுப் பழக்கவழக்கங்களால், எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் (ROS) தேக்கமடைந்து, உடலில் உள்ள செல்களின் வடிவம், டிஎன்ஏ, புரோட்டீன்கள் மற்றும் செல்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்படும். ஒருவரது உடலில் அதிகளவு எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் அதிகரித்தால், அது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உள் அழற்சியை அதிகரித்துவிடும். ஆனால் நீர் விரதத்தை மேற்கொண்டால், எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிடும்.

ஆண்களை அதிகம் தாக்கும் முதுகெலும்பு அழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

உடல் சுத்தம்

உடல் சுத்தம்

பொதுவாக உடல் தன்னைத் தானே சுத்தம் செய்துக் கொள்ளக்கூடியது. எப்போது உடலால் அச்செயலை செய்ய முடியவில்லையோ, அப்போது உடலில் டாக்ஸின்களின் அளவு அதிகரித்து, புற்றநோய் போன்ற பெரிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும்.

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீர் விரதம் இருப்பதன் மூலம், உடலில் கழிவுகளின் தேக்கத்தைத் தடுத்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நீர் விரதம் மேற்கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். நீர் உடலில் உள்ள அதிகப்படியான டாக்ஸின்களை வெளியேற்ற உதவி புரியும். இதனால் செல்கள் தங்கு தடையின்றி சாதாரணமாக செயல்பட ஆரம்பிக்கும். இதன் விளைவாக நோயெதிர்ப்பு மண்டலமும் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.

இன்சுலின் மற்றும் லெப்டின் சென்சிடிவிட்டி மேம்படும்

இன்சுலின் மற்றும் லெப்டின் சென்சிடிவிட்டி மேம்படும்

இன்சுலின் மற்றும் லெப்டின் ஹார்மோன்கள் தான் இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது மற்றும் பசியுணர்வுத் தூண்ட காரணமானவைகள். விரதம் இருப்பதால், உடலின் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டி அதிகரித்து, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் அபாயம் குறையும். லெப்டின் என்னும் ஹார்மோன் தான் பசிக்கு காரணமானவை. லெப்டின் சென்சிடிவிட்டி மேம்படும் போது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் பருமனடைவதும் தடுக்கப்படும்.

இந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா?

நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும்

நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும்

விரதம் இருப்பதால் நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும். அதுவும் புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்றவை மட்டுமின்றி, விரதம் இருப்பதால் நாள்பட்ட அழற்சி மற்றும் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் தடுக்கப்படுவதோடு, ஞாபக மறதி மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளும் குறையும்.

இவையே நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளாகும்.

எத்தனை நாட்கள் மேற்கொள்ளலாம்?

எத்தனை நாட்கள் மேற்கொள்ளலாம்?

நீர் விரதத்தை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மேற்கொள்வது சிறந்தது. இதனால் நீர் விரதத்தின் முழு நன்மைகளையும் பெற முடியும்.

யாரெல்லாம் நீர் விரதம் மேற்கொள்ளலாம்?

யாரெல்லாம் நீர் விரதம் மேற்கொள்ளலாம்?

* மருத்துவர் கூறினால் மேற்கொள்ளலாம்

* நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த விரும்பினால்

* உடல் பருமன் உள்ளவர்கள்

* உடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள்

கக்கா.. போகும் போது வலியுடன், இரத்தக்கசிவும் ஏற்பட காரணம் என்ன?

யாரெல்லாம் நீர் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது?

யாரெல்லாம் நீர் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது?

* மருத்துவரின் பரிந்துரையின்றி கூடாது

* ஹைப்போக்ளைசீமியா

* சர்க்கரை நோய் இருப்பவர்கள்

* மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள்

* சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்

* கர்ப்பிணிகள்

* சமீபத்தில் பிரசவமான பெண்கள்

எப்படி நீர் விரதம் மேற்கொள்வது?

எப்படி நீர் விரதம் மேற்கொள்வது?

* நீங்கள் விரதம் இருந்து பழக்கபட்டவர்கள் இல்லையென்றால், முதலில் 4 மணிநேரம் உணவு உண்ணாமல் இருந்து பாருங்கள். அதாவது வயிறு நிறைய காலை உணவை 8 மணிக்கு உண்ட பின்பு எதையும் சாப்பிடாமல், மதியம் 12 மணிக்கு அடுத்த உணவை உண்ணுங்கள்.

* இப்படியே மெதுவாக 8 மணிநேரத்திற்கு முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடியுமானால், அப்படியே 24 மணநேரத்திற்கு முயற்சி செய்யுங்கள்.

* நீர் விரதத்தை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை பின்பற்றலாம்.

* விரதத்தை முடிக்கும் போது, வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது. முதலில் மிதமான அளவில் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

* முக்கியமாக நீர் விரதத்தின் போது நீரை எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம்.

இறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன? எவ்வளவு காலம் உயிர் வாழலாம்?

* மேலும் விரதம் இல்லாத நாட்களில் சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

* உடல்நலம் சரியில்லாதது போன்று தோன்றினால், உடனே விரதத்தை கைவிடுங்கள்.

நீர் விரதத்தின் ஆபத்துக்கள்

நீர் விரதத்தின் ஆபத்துக்கள்

* உண்ணும் கோளாறுகளுக்கு காரணமாகிறது

* நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மோசமாக்கும்

* உடம்பு சரியில்லாமை மற்றும் குமட்டல்

* பசி மனநிலை ஏற்ற இறக்கங்களைத் தூண்டும்.

* யூரிக் அமில உற்பத்தி அதிகரிக்கலாம்

* வெகுநாட்கள் மேற்கொண்டால் மூளை மூடுபனி ஏற்படக்கூடும்.

குறிப்பு

குறிப்பு

நீர் விரதத்தை ஒருவர் சரியாக மேற்கொண்டு வந்தால், நல்ல பலனைக் காணலாம். மேலும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பது உறுதி. மேலும் நீர் விரதம் மேற்கொள்ளும் முன், மருத்துவரை அணுகி அவரது அனுமதியைக் கேட்டு, பின் மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits And Dangers Of Water Fasting

Here are some benefits and dangers of water fasting. Read on to know more...
Desktop Bottom Promotion