நீங்கள் உணவில் அதிகமாக சர்க்கரை சேர்க்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

யாருக்கு தான் இனிப்பு பண்டங்கள் பிடிக்காமல் இருக்கும். அனைவருமே இனிப்பு பலகாரங்களைப் பார்த்ததும், உடனே வாயில் போடத் தான் ஆசைப்படுவோம். சிலருக்கு தினமும் இனிப்பு பண்டங்களை சிறிதாவது சாப்பிட வேண்டும் எனத் தோன்றும். இதற்காகவே வீட்டில் இனிப்பு பலகாரங்கள் ஸ்டாக் வைத்திருப்பார்கள்.

இப்படி அதிக இனிப்புக்களை சாப்பிட்டால், சர்க்கரை நோய் வந்துவிடும் என்பது அனைவருக்குமே தெரிய்ம். ஆனால் இன்னும் சிலருக்கு இனிப்பு பண்டங்களின் மீது ஆசையே இருக்காது. ஆனால் இத்தகையவர்களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது. அது எப்படி எனத் தெரியுமா?

Signs You Are Eating Too Much Sugar

நாம் அன்றாடம் கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவோம். இப்படி பாக்கெட் போட்டு விற்கப்படும் உணவுகளில் நம்மை அறியாமலேயே சர்க்கரையை சேர்க்கிறார்கள் என்பது தெரியுமா? அது இனிப்பு பலகாரம் ஆகட்டும் அல்லது கார பலகாரமாகட்டும். அனைத்திலும் சர்க்கரை சேர்க்கப்பட்டு வருகிறது. அதுவும் சர்க்கரை என்ற பெயரில் இல்லாமல், வேறு பெயர்களின் சேர்க்கப்பட்டிருக்கும்.

முக்கியமாக பாக்கெட் உணவுகளின் பின் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலில் சர்க்கரை என்று குறிப்பிடாமல், வேறு பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும். இங்கு சர்க்கரையை வேறு எப்படியெல்லாம் பாக்கெட் உணவுகளின் பின் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும், ஒருவர் அதிகமாக சர்க்கரை உணவுகளை உட்கொள்கிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் குறித்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரையின் வேறு பெயர்கள்

சர்க்கரையின் வேறு பெயர்கள்

* கார்ன் சிரப்

* டெக்ஸ்ட்ரின்

* டெக்ஸ்ட்ரோஸ்

* டைகிளிசரைடுகள்

* டிஸ்அக்கரைடுகள்

* எவாப்பரேட்டட் கரும்பு சாறு

* ஃபுருக்டோஸ்

* க்ளுக்கோஸ்

* மால்ட் சிரப்

* மால்ட்டோடெக்ஸ்ட்ரின்

* மால்டோஸ்

* ரைஸ் சிரப்

* சார்பிடோல்

* சுக்ரோஸ்

இனிப்பு பண்டங்களின் மீது ஆசை

இனிப்பு பண்டங்களின் மீது ஆசை

சர்க்கரை ஒரு அடிமைப்படுத்தும் பொருள். இதில் கொக்கைன் என்னும் அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. மேலும் சர்க்கரை உடலில் மன அழுத்த ஹார்மோனான டோபனைன் உற்பத்தியைத் தூண்டும். இனிப்பு பலகாரங்களைப் பற்றி நினைக்கும் போதே, அதன் மீதான பிரியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது நாம் சர்க்கரைக்கு அடிமையாகி உள்ளோம் என்று அர்த்தம்.

மிகுந்த களைப்பு

மிகுந்த களைப்பு

சர்க்கரையை உணவில் அதிகம் சேர்ப்பவர்கள், இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டதும், இரத்தத்தில் இன்சுலின் அளவு சட்டென்று அதிகரித்து, சுறுசுறுப்பானவர்களாக இருப்பர். ஒருவேளை நாள் முழுவதும் இனிப்பு பலகாரங்களையே சாப்பிடாமல் இருந்தால், அவர்கள் நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருப்பர். இப்படி நீங்களும் இருந்தால், அது நீங்கள் சர்க்கரையை அதிகம் சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்.

உடல் பருமன்

உடல் பருமன்

அதிகப்படியான சர்க்கரையை உணவில் சேர்ப்பவர்கள் குண்டாக இருப்பர். ஏனெனில் சர்க்கரையில் நார்ச்சத்து, புரோட்டீன் ஏதும் இல்லை. மாறாக கலோரிகள் தான் அதிகம் உள்ளது. இதன் விளைவாக உடல் பருமனுக்கு காரணமான இன்சுலின் அதிகமாக வெளியிடப்பட்டு, உடல் எடை அதிகரிக்கும்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

சர்க்கரை உடலில் அழற்சிக்கு வழிவகுக்கும் மற்றும் சரும பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் ரோசாஸா, எக்ஸிமா, முகப்பரு, எண்ணெய் பசை மற்றும் அதிக சரும வறட்சிக்கு வழிவகுக்கும். எனவே இதிலிருந்து விடுபட சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பலவீனமான சுவை மொட்டுக்கள்

பலவீனமான சுவை மொட்டுக்கள்

அளவுக்கு அதிகமாக சர்க்கரையை சாப்பிடுபவர்களின் சுவை மொட்டுக்கள் அழிக்கப்படும். சர்க்கரை தொடர்ச்சியாக சுவை மொட்டுக்களின் மீது படும் போது, எப்போதும் சர்க்கரை உணவை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் எழும். எனவே உங்களுக்கு இம்மாதிரியான உணர்வு இருப்பின், உடனே சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

நீங்கள் அதிகமாக சர்க்கரையை சாப்பிடுபவராயின், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக, சிறுநீரகத்தால் சிறுநீரை உறிஞ்சி தக்க வைக்க முடியாமல் போகும். இதன் விளைவாக உடலானது இரத்தத்தில் மற்றும் செல்களில் உள்ள க்ளுக்கோஸ் அடர்த்தியை சரிசமமாக்குவதற்கு, அடிக்கடி சிறுநீரை கழிக்க வைக்கும்.

கவனச்சிதறல்

கவனச்சிதறல்

உணவில் சர்க்கரைளை அதிகம் சேர்ப்பவர்களின் உடலில் இருக்கும் அதிக சர்க்கரை அளவு மூளைச் செல்களில் க்ளுக்கோஸ் நுழைவதைத் தடுக்கும். இதன் விளைவாக மூளை ஆற்றல் கிடைக்காமல் சிரமத்தை அனுபவிக்கும். இதனால் சிந்திக்கும் வேகமும், முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்பட்டு, எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

மங்கலான பார்வை

மங்கலான பார்வை

நீங்கள் உணவில் சர்க்கரையை அதிகம் சேர்ப்பவராயின், அவர்களது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, உடல் வறட்சி ஏற்பட்டு மங்கலான பார்வை பிரச்சனையை சந்திக்க நேரிமும். இதன் விளைவாக ஒழுங்கற்ற மற்றும் சரியாக பார்க்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

சளி

சளி

அடிக்கடி சளிப் பிடிக்கிறதா? அப்படியானால் நீங்கள் அதிகளவு சர்க்கரையை சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம். சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்து, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You Are Eating Too Much Sugar

Here are some signs that you are eating too much sugar. Read on to know more...
Story first published: Tuesday, January 16, 2018, 16:40 [IST]
Subscribe Newsletter