For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகங்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும் அற்புத டீ!

இங்கு சிறுநீரகங்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும் டீ குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

நமது உடலில் சிறுநீரகங்கள் முக்கிய பணியை செய்கின்றன. அதில் இரத்தத்தை தொடர்ச்சியாக வடிகட்டி, அதில் உள்ள கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும். நமது உடலில் டாக்ஸின்களானது பல வழிகளில் நுழைந்து தேங்க ஆரம்பிக்கிறது. அதிலும் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், உடலில் அழுக்குகள் அதிகம் தேங்கி, சிறுநீரகங்கள் அதன் வேலையை மிகவும் கடினமாக செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி சிறுநீரகங்கள் பல நாட்களாக கடினமாக தனது பணியை செய்து வந்தால், அதனால் சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வர ஆரம்பிப்பதோடு, நச்சுக்கள் நிறைந்ததாகவும் ஆகிவிடும்.

How To Cleanse Your Kidneys Almost Instantly Using This Natural Home Drink

எனவே சிறுநீரகங்களை சுத்தமாகவும், நச்சுக்களின்றியும் வைத்துக் கொள்வதற்கு தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பதோடு, அவ்வப்போது சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும் பானங்கள், உணவுகளையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். இப்பழக்கத்தை ஒருவர் கொண்டிருந்தால், சிறுநீரக நோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும் உடலில் டாக்ஸின்களின் பெருக்கத்தைத் தடுக்கலாம்.

சிறுநீரகங்களில் தேங்கியுள்ள அழுக்குகள் அல்லது டாக்ஸின்களை வெளியேற்ற உதவும் ஓர் அற்புதமான எளிய வழி என்னவென்று கேட்கலாம். அதற்கு ஒரே சிறப்பான வழி பார்ஸ்லி டீ தான். இந்த பார்ஸ்லி டீயை ஒருவர் அவ்வப்போது குடித்து வந்தால், சிறுநீரக பிரச்சனைகளைத் தவிர்த்து, சிறுநீரகங்களில் உள்ள அழுக்கை நீக்கி, சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

சரி, இப்போது சிறுநீரகங்களில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவும் அந்த டீ குறித்துக் காண்போம். அதைப் படித்து, அந்த டீயைத் தயாரித்துக் குடித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பார்ஸ்லி எப்படி சிறுநீரகங்களுக்கு உதவுகிறது?

பார்ஸ்லி எப்படி சிறுநீரகங்களுக்கு உதவுகிறது?

பார்ஸ்லியில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து போன்ற சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்கள் அனைத்தும் உள்ளது. பாரம்பரிய மருத்துவம் சிறுநீரக கற்களைக் கரைக்க பார்ஸ்லி என்னும் மூலிகையைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. அதற்கு பார்ஸ்லி மூலிகையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக் வேண்டும்.

 பார்ஸ்லி டீ குடிப்பதால் சிறுநீரகங்களில் ஏற்படும் அற்புதங்கள்!

பார்ஸ்லி டீ குடிப்பதால் சிறுநீரகங்களில் ஏற்படும் அற்புதங்கள்!

பார்ஸ்லி டீயை குடித்து வந்தால், அது சிறுநீரின் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும். அதோடு இது சிறுநீரக கற்கள் இருந்தாலும், கரையச் செய்து வெளியேற்றும். அதோடு பார்ஸ்லி டீ சிறுநீரக திசுக்கள் உப்புக்களை உறிஞ்சுவதைத் தடுத்து, சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். மேலும் இந்த டீ மன பதற்றத்தைக் குறைப்பதோடு, நரம்புகளையும் அமைதிப்படுத்தும்.

பார்ஸ்லி டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

பார்ஸ்லி டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* பார்ஸ்லி கீரை - 1 கட்டு

* நீர் - 8 கப்

* தேன் - 2 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை - 1/2 (பிழிந்தது)

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* பார்ஸ்லி கீரையை நீரில் கழுவு, நறுக்கிக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

* பின்பு அதில் பார்ஸ்லி கீரையைப் போட்டு குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.

* பிறகு அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* இந்த டீயை தினமும் 1-2 கப் குடியுங்கள்.

* இந்த டீயை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

குறிப்பு

குறிப்பு

ஒருவேளை நீங்கள் சிறுநீரக பிரச்சனைகளுக்கு அல்லது இதர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், பார்ஸ்லி டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அதேப் போல் கர்ப்பிணிகள் இந்த டீயைக் குடிக்க வேண்டாம். ஏனெனில் இது கருச்சிதைவை உண்டாகும்.

இப்போது பார்ஸ்லியினால் கிடைக்கும் இதர நன்மைகள் என்னவென்று காண்போம்.

எடை குறைவு

எடை குறைவு

பார்ஸ்லியில் கலோரிகள் மிகவும் குறைவு. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுவதோடு, உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றும் மற்றும் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும். பார்ஸ்லி டீயை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் குடித்து வந்தால், உடல் எடை கணிசமாக குறைவதைக் காணலாம்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

பார்ஸ்லியில் உள்ள ப்ளேவோனாய்டான மைரிசிடின், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும். ஆய்வு ஒன்றில் சர்க்கரை நோய் கொண்ட எலிகளுக்கு ஒரு மாதம் கொடுக்கப்பட்டு வந்தது. அதில் எலிகளின் இரத்த சர்க்கரை அளவு குறைந்தது நன்கு தெரிய வந்தது. துருக்கியில் பாரம்பரியமாக சர்க்கரை நோய்க்கு மருந்தாக பார்ஸ்லி தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

பார்ஸ்லியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெறும். ஏனெனில் இதில் செரிமானத்திற்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் நொதிகள் உள்ளது. அதிலும் இதில் உள்ள நொதிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும் மற்றும் உடலில் புரோட்டீன்கள் மற்றும் கொழுப்புக்களை செரிமானமடையச் செய்யும்.

ருமடாய்டு ஆர்த்ரிடிஸ்

ருமடாய்டு ஆர்த்ரிடிஸ்

பார்ஸ்லியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்றவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்று செயல்பட்டு, ஆர்த்ரிடிஸைக் கட்டுப்படுத்துவதோடு, ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்கவும் உதவும். ஆகவே உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பின், பார்ஸ்லி டீயை தினமும் குடித்து வாருங்கள். இது யூரிக் அமில அளவைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளைக் குறைக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

பார்ஸ்லியில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும். அதுவும் இதில் வைட்டமின்களான வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, ஃபோலேட், நியாசின் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கும் சக்தி வாய்ந்தவைகள் ஏராளமான அளவில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Cleanse Your Kidneys Almost Instantly Using This Natural Home Drink

Drinking parsley tea helps cleanse your kidneys by increasing urine production and flow, which may “push” out kidney stones. Read on to know more...
Desktop Bottom Promotion