For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

இங்கு வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகளும், அதை சரிசெய்யும் உணவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நீரில் கரையக்கூடிய வைட்டமின் தான் வைட்டமின் பி12. இது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் டி.என்.ஏ உற்பத்தி மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக இந்த வைட்டமின் அசைவ உணவுகளான இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் பொருட்களில் அதிகளவில் இருக்கும். இருப்பினும் இந்த வைட்டமின் சைவ உணவுகள் சிலவற்றிலும் நிறைந்துள்ளது.

Vitamin B12 Deficiency Symptoms And Foods To Eat

இந்த வைட்டமின் பி12 சிலரது உடலில் குறைவாக இருக்கும். ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. ஏனெனில் இந்த குறைபாட்டினால் வெளிப்படும் அறிகுறிகள், நாம் சாதாரணமாக அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாரெல்லாம் இந்த குறைபாட்டினால் அவஸ்தைப்படுவார்கள்?

யாரெல்லாம் இந்த குறைபாட்டினால் அவஸ்தைப்படுவார்கள்?

பொதுவாக வைட்டமின் பி12 குறைபாடு கீழ்கண்டவர்களுக்கு தான் வரும்.

* முதியவர்கள்.

* குடலில் வைட்டமின் பி12-ஐ உறிஞ்சும் பகுதியை அறுவை சிகிச்சை செய்தவர்கள் .

* நீரிழிவுக்கான மருந்து மெட்ஃபோர்மினில் மருந்து எடுப்பவர்கள்.

* கடுமையான சைவ டயட் மேற்கொள்பவர்கள்

* நெஞ்செரிச்சலுக்காக நீண்ட நாட்கள் ஆண்டாசிட் மருந்துகளை எடுப்பவர்கள்.

இப்போது வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகளைக் காண்போம்.

அறிகுறி #1

அறிகுறி #1

ஒருவரது உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், அவர்களது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவாக இருக்கும். இதனால் சருமம் மற்றும் கண்கள், சற்று வெளுத்தோ அல்லது மஞ்சளாகவோ காணப்படும்.

அறிகுறி #2

அறிகுறி #2

உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருக்கும் போது, உடலால் போதுமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போய், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காமல், எப்போதும் மிகுந்த களைப்பையும், பலவீனத்தையும் அனுபவிக்கக்கூடும்.

அறிகுறி #3

அறிகுறி #3

வைட்டமின் பி12 நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் நரம்புகளைப் பாதுகாக்கும் மீலின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின் சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், நரம்புகள் சேதமடைந்து ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.

அறிகுறி #4

அறிகுறி #4

வைட்டமின் பி12 குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை கவனித்து சரிசெய்ய முயற்சிக்காமல் இருந்தால், உடல் சமநிலையைப் பாதித்து, நடப்பது மற்றும் நகர்வதில் சிரமத்தை சந்திக்க வைக்கும்.

அறிகுறி #5

அறிகுறி #5

வைட்டமின் பி12 குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளுள் ஒன்று நாக்கு மற்றும் வாயில் புண் உண்டாகும். முக்கியமாக நாக்கு சிவந்தும், வீக்கமடைந்தும் காணப்படும்.

அறிகுறி #6

அறிகுறி #6

வைட்டமின் பி12 குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுவதுடன், சிலரால் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் மற்றும் அவ்வப்போது தலைச்சுற்றல் ஏற்படும். இதற்கெல்லாம் முக்கிய காரணம் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதது தான்.

அறிகுறி #7

அறிகுறி #7

வைட்டமின் பி12 குறைபாட்டினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் போது, கண்களுக்கு செல்லும் நரம்புகளும் பாதிக்கப்படுவதால், பார்வை கோளாறு அல்லது மங்கலான பார்வை பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

அறிகுறி #8

அறிகுறி #8

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், சிலருக்கு மனநிலையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடுவதோடு, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்பட்டு டிமென்ஷியா போன்ற நோயால் பாதிக்கப்படக்கூடும்.

அறிகுறி #9

அறிகுறி #9

வைட்டமின் பி12 குறைபாட்டின் மிகவும் அரிதான ஒரு அறிகுறி தான் அதிக உடல்வெப்பநிலை. இதற்கான சரியான காரணம் தெரியாவிட்டாலும், சில மருத்துவர்கள் உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்து காய்ச்சல் வந்தால், அதற்கு இந்த குறைபாடு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

வைட்டமின் பி12 சத்து அசைவ உணவுகளான இறைச்சி, முட்டை, மீன், சிக்கனில் இருந்தாலும், சில சைவ உணவுப் பொருட்களிலும் நிறைந்துள்ளது. உங்களுக்கு சைவ உணவுகள் தான் பிரியம் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வைட்டமின் பி12 உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சீஸ்

சீஸ்

சீஸ்களில் பல வகைகள் உள்ளன. இவை அனைத்திலுமே வைட்டமின் பி12 ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்ய வேண்டுமானால், சீஸை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பால்

பால்

பாலில் கால்சியத்திற்கு அடுத்தப்படியாக வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. அதுவும் 250 மிலி பாலில் 1.2-1.4 mcg வைட்டமின் பி12 உள்ளது. எனவே வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்க, தினமும் தவறாமல் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

தயிர்

தயிர்

உங்களுக்கு தயிர் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அதை சாப்பிடுங்கள். இதில் வைட்டமின் பி12 அதிகம் இருப்பதோடு, தயிர் செரிமான பிரச்சனைகளையும் தடுக்கும்.

வே புரோட்டீன்

வே புரோட்டீன்

ஜிம் சென்று உடலை வளர்க்க விரும்புவோர் உட்கொள்ளும் வே புரோட்டீனில் வைட்டமின் பி12 ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

காளான்

காளான்

காளானில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், காளானை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு சோயா பால் சிறந்தது. இதில் கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின் பி12 அதிகம். எனவே வைட்டமின் பி12 இருப்பவர்கள், சோயா பொருட்களை அன்றாட உணவில் சேர்க்க, அந்த குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

செரில்கள்

செரில்கள்

காலை உணவாக உட்கொள்ளும் செரில்களிலும் வைட்டமின் பி12 உள்ளது. அதிலும் வலுவூட்டப்பட்ட செரில்களில் வளமான அளவில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. ஆகவே வைட்டமின் பி12 குறைபாடு இருப்பவர்கள், செரில்களை சோயா பால் சேர்த்து தினமும் உட்கொள்ள விரைவில் அதிலிருந்து விடுபடலாம்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பாலில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது. அதுவும் ஒரு கப் தேங்காய் பாலில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் பி12 சத்தில் 50 சதவீதத்தைப் பெறலாம்.

பாதாம் பால்

பாதாம் பால்

உங்களுக்கு பாதாம் பால் பிடிக்குமானால், அடிக்கடி குடியுங்கள். பாதாம் பாலில் கலோரிகள் குறைவு மற்றும் வலிமையான வைட்டமின் பி12 சத்துக்கள் அதிகம். மேலும் இது மாட்டு பாலுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin B12 Deficiency Symptoms And Foods To Eat

Here we listed vitamin b12 deficiency symptoms and veg foods to eat. Read on to know more...
Story first published: Monday, December 18, 2017, 11:45 [IST]
Desktop Bottom Promotion