டிப் சாயா குடிக்கிறீங்களா? இதப்படிச்சிருங்க

Posted By: Aashika
Subscribe to Boldsky

டீ- உலகம் முழுவதும் குடிக்கப்படும் பானங்களில் ஒன்று. சிலர் டீ குடிக்ககூடாது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் டீ குடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சிலரோ பால் கலக்காத ப்ளாக் டீ, லெமன் டீ, க்ரீன் டீ என்று பல செய்முறைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறரகள்.

Tea Leaves Vs Tea Bag

டீ விவாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சோம்பேறித்தனத்தால் நாம் வாங்கி உபயோகிக்கும் டீ பேக் நல்லதா என்று பார்க்கலாம். தேயிலைத் தூளை விட டீ பேக் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்பது தான் நிதர்சனமான உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்படுத்துவது எளிது :

பயன்படுத்துவது எளிது :

தேயிலைகளை பயன்படுத்துவது ஒன்றும் பெரிய சூத்திரமல்ல. கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் தேயிலைத் தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இலையின் சாறு தண்ணீரில் இறங்கியதும் அதனை வடிகட்டி பருகலாம்.

பயன்பாடு :

பயன்பாடு :

டீ பேக் போட்டு டிப் டீ குடிப்பவர்கள் அதனை ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். அத்துடன் அதன் விலையும் அதிகம். தேயிலைத் தூள் எனும் பட்சத்தில் 3கிராம் டீ லீவ்ஸ் கொண்டு ஒரு கப் டீ தயாரிக்கலாம். அதே இலையை இரண்டாம் முறையும் பயன்படுத்தலாம். குறைந்த அளவு,பல முறை பயன்படுத்த முடிவதால் உங்களுக்கு டீ லீவ்ஸ் பயன்படுத்த பணம் ஒரு பிரச்சனையாக இருக்காது.

அதீத சுவை :

அதீத சுவை :

டீ பேகில் இருப்பது டீ டஸ்ட் மட்டுமே. ஆனால் இலைகளில் எண்ணெய் சத்து அதிகமாக இருக்கும். இது நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதுடன் உடல் நலத்திற்கும் நல்லது. டீ பேக் உங்களுக்கு நிறத்தை கொடுக்கிறதே தவிர சத்துக்களை கொடுப்பதில்லை.

சத்துக்கள் அதிகம் :

சத்துக்கள் அதிகம் :

ஒவ்வொரு நாளும் எப்படியாவது உடல் நலத்தை பேணிக்காக்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் அதிகரித்து வருகிறது. தேயிலைகளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பாலிபினால்ஸ் நிரம்பியிருக்கின்றன. ஒரு கப் டீ குடிப்பது புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். அத்துடன் உடல் எடையை குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

எடை குறைவு :

எடை குறைவு :

எடைக்குறைக்க வேண்டுவோரின் முக்கிய பானம் க்ரீன் டீ. டீ பேகில் இருப்பதை பயன்படுத்தும் போது குறிப்பட்ட சத்துக்கள் அதுவும் குறைந்த அளவிலான சத்துக்கள் தான் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் டீ லீஃவ்சில் அப்படியல்ல வயதான தோற்றம் வருவதையும் தள்ளிபோட்டு நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க உதவிடும் இந்த தேயிலைத் தூள்.

டீ டஸ்ட் :

டீ டஸ்ட் :

டீ த்தூள் தயாரிப்பின் போது மீதமான தூளே பெரும்பாலும் டீ பேகில் நிரப்பப்படுகிறது. அத்துடன் மணத்திற்கும் நிறத்திற்கும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படும். அவற்றிலிருக்கும் எண்ணெய் விரைந்து ஆவியாகிவிடும். இவை நிறைய டானின்களை வெளியிட்டு துவர்ப்பு சுவையை கொடுத்திடும்.

டிப் டீயை விட டீ இலைகளை சேர்த்து டீ அருந்துவதே உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை சோம்பேறித்தனத்தை கைவிட்டுவிட்டு டீ இலைகளை பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tea Leaves Vs Tea Bag

tea leaves or tea bag? Let You Know which one is best to drink
Story first published: Wednesday, July 19, 2017, 18:05 [IST]