Latest Updates
-
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Saturn Mars Conjunction In Pisces 2026: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். 30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.
மறுபுறம் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில், செவ்வாய் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மீன ராசியில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. முக்கியமாக செவ்வாய் 18 மாதங்களுக்கு பின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் வழக்கத்தை விட மிகவும் தீவிரமாக இருக்கும். அதுவும் பகை உணர்வு கொண்ட சனியுடன் செவ்வாய் இணைவதால், மோதல்கள், வாக்குவாதம், மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கும். மேலும் முடிவெடுப்பதில் குழப்பத்தையும் சந்திக்க நேரிடும்.
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், சில மிகுந்த மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும். இப்போது மீன ராசியில் ஒன்றிணையும் சனி மற்றும் செவ்வாயால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். வேலையில் தடைகள் அதிகரிக்கும். அவசரமாக எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புதிய வேலைகளை தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு பயணங்களையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இழப்புக்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு சுமாராக இருக்கும்.
தொழிலையும், தனிப்பட்ட வாழ்க்கையும் பராமரிப்பது கடினமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகளால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். எந்த புதிய முயற்சிகளையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடும். புதிய நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வேலைகளை முடிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கும். பணியிடத்தில் கவனக்குறைவால் தவறுகளை செய்து, பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இக்காலத்தில் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



