ஒருவரது உடலினுள் சளி மிகவும் தீவிர நிலையில் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் அனைவரும் வாழ்வின் ஒரு கட்டத்தில் சளியால் அவஸ்தைப்படுவோம். சளி பிடித்தாலே, எப்போது அந்த சளி போகும் என்று தான் நினைப்போம். அந்த அளவில் சளி ஒருவருக்கு பிடித்துவிட்டால், அது பாடாய் படுத்திவிடும்.

Signs Your Cold Is Way Too Serious Than You Think

ஆனால் நம்மில் பலர் சளி பிடித்தால், அதை சாதாரணமாக நினைத்து, தற்காலிகமாக ஏதேனும் மாத்திரையை எடுத்துக் கொண்டு விட்டுவிடுவோம். சளி ஒருவருக்கு அடிக்கடி பிடிக்குமானால், அவர்கள் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் சளி உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் தான், அடிக்கடி சளி பிடிக்கும். இங்கு ஒருவரது உடலில் சளி தீவிர நிலையில் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று வாரங்களுக்கு மேல் இருப்பது

மூன்று வாரங்களுக்கு மேல் இருப்பது

ஒருவருக்கு இருமல் அல்லது சளி மூன்று வாரத்திற்கு மேலாக இருந்தால், அவர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஏனெனில் இதை அப்படியே விட்டுவிட்டால், அது ஆஸ்துமா, நிமோனியா அல்லது பல்வேறு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

விட்டு விட்டு சளி பிடிப்பது

விட்டு விட்டு சளி பிடிப்பது

சில நேரங்களில் சளி பிடித்து உடனே சரியானது போல் இருக்கும். ஆனால் மீண்டும் சளி பிடிக்கும் இப்படி விட்டுவிட்டு சளி பிடிக்குமானால், அதை அப்படியே சாதாரணமாக விடாதீர்கள். இதுவும் சளி உடலினுள் தீவிர நிலையில் உள்ளதைத் தான் குறிக்கிறது.

வித்தியாசமான நிறத்தில் சளி

வித்தியாசமான நிறத்தில் சளி

சளி வெளியேறும் போது, அதன் நிறம் வித்தியாசமாக இருந்தால், உடலினுள் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பொதுவாக சளியின் நிறம் வித்தியாசமாக இருப்பதற்கு காரணம், வெள்ளையணுக்கள் உடலைத் தாக்கிய கிருமிகளுடன் பயங்கரமாக எதிர்த்துப் போராடுவது தான்.

கண்களில் எரிச்சல் அல்லது நீர் வடிதல்

கண்களில் எரிச்சல் அல்லது நீர் வடிதல்

சளி பிடித்திருக்கும் போது கண்களில் இருந்து அடிக்கடி நீர் அதிகமாக வடிந்தால், அது சளி மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

எடை குறைவு

எடை குறைவு

நன்கு சாப்பிட்டும் உடல் எடை குறைகிறதா? அப்படியெனில் சாதாரணமாக நினைக்க வேண்டாம். இது ஹைப்பர் தைராய்டிசம், தீவிர பாக்டீரியல் தொற்றுகள் அல்லது எச்.ஐ.வி இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மூச்சு விடுவதில் சிரமம்

மூச்சு விடுவதில் சிரமம்

சளி பிடித்திருக்கும் போது, மூச்சு விடுவதில் மிகுந்த சிரமத்தை உணர்ந்தால், ஆஸ்துமா தாக்குதலுக்கான வாய்ப்புக்கள் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உடலினுள் கடுமையான அழுத்தம்

உடலினுள் கடுமையான அழுத்தம்

உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் கடுமையான வலி அல்லது அழுத்தத்தை உணர்ந்தால், கவனமாக இருங்கள். உதாரணமாக சைனஸ் தொற்றுகள் கடுமையாக இருந்தால், அது மூச்சுக்குழாய் அல்லது பற்களைக் கூட தாக்கும்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள்

குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு போன்றவை சளி பிடித்திருக்கும் போது சேர்ந்து இருந்தால், அது உடலினுள் ஏதோ தீவிர பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

கடுமையான தலைவலி

கடுமையான தலைவலி

சளி பிடித்திருக்கும் போது, கடுமையான தலைவலி, காய்ச்சல் மற்றும் கழுத்துப் பிடிப்புக்கள் போன்றவை இருந்தால், அது மூளை உறையழற்சி இருப்பதற்கான அறிகுறியாகும்.

உடல் வலி

உடல் வலி

சாதாரண சளி உடல் வலியை உண்டாக்காது. ஆனால் காய்ச்சலுடன் சளி பிடித்திருந்தால், அது தசை மற்றும் உடல் வலியை உண்டாக்குவதோடு, மிகுதியான சோர்வு மற்றும் குளிர் நடுக்கத்தை உண்டாக்கும். இதுவும் சளி மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs Your Cold Is Way Too Serious Than You Think

Read this article to know about the signs that your cold is more serious.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter