Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
3 நாட்களில் மூட்டு வலியை முற்றிலும் போக்கும் ஓர் அற்புத வழி!
இங்கு மூட்டு வலியை உடனடியாக குறைக்கும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏராளமானோர் அன்றாட செயல்களை செய்ய முடியாமல் மூட்டு வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூட்டு வலிக்கிறது என்று மருத்துவரிடம் சென்றால் அவர் மாத்திரைகளை கொடுத்து நம் வயிற்றை புண்ணாக்கி விடுகிறார்கள்.
ஆனால் மூட்டு வலிக்கு ஓர் அற்புத இயற்கை வழி உள்ளது. இக்கட்டுரையில் அந்த அற்புத வலிக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:
வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் - 1 கப்
வரமிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1
வரமிளகாய் பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட் செய்யும் போது வெறும் கைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

செய்முறை #2
கையுறைகளை அணிந்து கொண்டு, வலியுள்ள மூட்டுப் பகுதியில் தடவ வேண்டும். ஒருவேளை பயங்கரமாக எரிச்சலை அனுபவித்தால், உடனே நீரில் கழுவி விடுங்கள். இல்லாவிட்டால், அடுத்த முறையைப் பின்பற்றுங்கள்.

செய்முறை #3
15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த முறையைப் பின்பற்றிய பின், கைகளை முகம் அல்லது கண்களுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

எத்தனை முறை செய்ய வேண்டும்?
இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை என தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்றினால், மூட்டு வலி பறந்தோடிவிடும்.

இம்முறை எப்படி வேலை செய்கிறது?
வரமிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், வலி நிவாரணி போன்று செயல்படும். இதனால் தான் மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

கேப்சைசின் என்ன செய்கிறது?
கேப்சைசின் மூளைக்கு வலி சமிக்கையை அனுப்பும் குறிப்பிட்ட கெமிக்கல்களை அழித்து, வலியைக் குறைக்கும். மேலும் நாம் பயன்படுத்தும் பல வலி நிவாரண க்ரீம்களிலும் இந்த பொருள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை!
* மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.
* காயங்கள் இருந்தால், இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.
* சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம்.



Click it and Unblock the Notifications
