Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் வாக்காளர்கள் மிகவும் குறைவாக உள்ள தொகுதி எது தெரியுமா?
Tamil Nadu Elections 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல் இதுவரை நடந்த தேர்தல் போல அல்லாமல் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நான்கு முனைப்போட்டியாக இருக்கப்போகிறது.
தமிழ்நாடு கிட்டதட்ட 8.5 கோடி மக்கள் தொகையுடன் இந்தியாவில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். மக்களவை தேர்தல் புள்ளி விவரங்களின் படி 6.41 கோடி பேருக்கு ஓட்டுரிமை இருந்தது, ஆனால் தற்போது சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்திற்கு பின்னர் கிட்டதட்ட 97 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை நீக்கப்பட்டுள்ளது. இந்த 97 லட்சம் ஓட்டுகள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றியை பாதிக்கலாம்.

இந்த சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தால் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதிகள் மற்றும் குறைவான வாக்காளர் கொண்ட தொகுதிகளே மாறிவிட்டது. இது வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் தமிழ்நாட்டில் குறைவான வாக்காளர் கொண்ட தொகுதிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் வாக்காளர்கள்
தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2026-ஆம் ஆண்டிற்கான சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் இறுதி பட்டியலின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 28,960,838 பேர் பெண்கள் மற்றும் 27,738,925 பேர் ஆண்கள் உள்ளனர். இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் (SIR) பிறகு, மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக, ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாவும் மொத்தம் 34,75,717 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2025 டிசம்பர் 19 முதல் ஜனவரி 30 வரையிலான, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பதிவு செய்வதற்கான காலக்கட்டத்தில், தகுதியுள்ள 27.53 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்; அதேவேளையில், தகுதியற்ற 4.23 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. தற்போது சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியலால் தமிழ்நாட்டில் குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதிகளின் பட்டியல் மாறிவிட்டன.
தமிழ்நாட்டின் குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதிகள்
- சென்னையில் உள்ள துறைமுகம் சட்டமன்றத் தொகுதிதான் தற்போது தமிழ்நாட்டிலேயே மிகவும் குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. SIR-க்குப் பிறகு துறைமுக தொகுதியில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 58,221, பெண் வாக்காளர்கள்,58,620 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 55 உள்ளனர்.
- துறைமுகம் தொகுதியைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் தொகுதி குறைவான வாக்காளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எழும்பூர் தொகுதியில் SIR-க்கு பிறகு 1,34,879 வாக்காளர்கள் உள்ளனர்.
- மூன்றாவது இடத்தில் சென்னையின் ராயபுரம் தொகுதி உள்ளது. தற்போது இந்த தொகுதியில் 1,56,931 வாக்காளர்கள் உள்ளனர்.
- நான்காவது தொகுதியும் சென்னையில்தான் உள்ளது. சென்னையின் வில்லிவாக்கம் தொகுதியில் இப்போது 1,59,764 வாக்காளர்கள் உள்ளனர்.
- ஐந்தாவது இடத்தில் தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி உள்ளது. தற்போது இந்த தொகுதியில் 1,63,866 வாக்காளர்கள் உள்ளனர்.



Click it and Unblock the Notifications
