ஏன் உணவில் மிளகை சேர்ப்பது மூளைக்கு நல்லது என்று சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் அனைவருக்குமே மிளகு உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என்று தெரியும். மிளகை உணவில் சேர்ப்பதால், செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் வராமலும் தடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

Reasons Pepper Is Good For Your Brain

ஆனால் அத்தகைய மிளகு நம் மூளைக்கும் மிகவும் நல்லது என்று தெரியுமா? ஆம், ஒருவர் தனது உணவில் மிளகைச் சேர்ப்பதன் மூலம், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இங்கு மிளகு மூளைக்கு எம்மாதிரியான நன்மைகளை உண்டாக்குகிறது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பர்கின்சன் நோய்

பர்கின்சன் நோய்

2012 ஆம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில், மிளகில் உள்ள உட்பொருள், டோபமைன் என்னும் கெமிக்கல் உடைவதைத் தடுக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் பர்கின்சன் என்னும் ஒருவகையான மறதி நோய் வரும் வாய்ப்பு குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அல்சைமர் நோய்

அல்சைமர் நோய்

2012 ஆம் ஆண்டு வெளிவந்த மற்றொரு ஆய்வில், மிளகை உணவில் சேர்த்து வந்தால், மூளைச் செல்களை அழித்து, நினைவை இழக்கச் செய்யும் ஒருவித மூளை நோயான அல்சைமர் நோய் தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

மன இறுக்கம்

மன இறுக்கம்

உங்கள் மனதில் ஏதேனும் இறுக்கத்தை உணர்ந்தால், சந்தோஷமான மனநிலையை உண்டாக்கும் செரடோனின் என்னும் கெமிக்கல் குறைவாக உள்ளது என்று அர்த்தம். மிளகில் உள்ள பெப்பரைன் என்னும் பொருள், நல்ல மனநிலையை உணர வைக்கும் கெமிக்கலை வெளியிடச் செய்து, மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும்.

வலிப்பு

வலிப்பு

மிளகில் உள்ள பெப்பரைன் நரம்பு செல்களில் கால்சியத்தின் பாய்ச்சலைக் கட்டுப்படுத்து, நரம்பு செல்களுக்கு ஒருவித பாதுகாப்பை வழங்கி, வலிப்பு வரும் அபாயத்தைக் குறைப்பதாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பக்கவாதம்

பக்கவாதம்

முக்கியமாக மிளகு மூளைப் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அன்றாட உணவில் மிளகை சேர்த்து உடல் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Pepper Is Good For Your Brain

Here are some reasons why pepper is good for your brain. Read on to know more...
Story first published: Monday, April 3, 2017, 16:31 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter