ஆரோக்கியமான முறையில் விரைவாக உடல் எடையை அதிகரிப்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ஒரு புறம் உடல் எடையை எப்படி குறைப்பது என்று அல்லாடிக்கொண்டிருக்க, ஒரு சிலரோ உடல் எடையை எப்படி அதிகரிப்பது என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். உடல் எடை அதிகமாக இருப்பது எப்படி ஆபத்தோ அதே போல தான் உடல் எடை குறைவாக இருப்பதும், சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும் வேகத்தை விட, குறையும் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியில் உடல் எடையை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.எதற்காக?

1.எதற்காக?

உடல் எடையானது, உயரத்திற்கு சமமாக இருக்க வேண்டியது அவசியம். 18.5க்கு கீழ் ஒருவரது பி.எம்.ஐ இருந்தால், அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எலும்புகள் வலுவிழந்திருக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

2 அதிகம் சாப்பிட வேண்டும்

2 அதிகம் சாப்பிட வேண்டும்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையின் போதும், உங்களது உடலில் உள்ள கலோரிகளின் அளவு குறைந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் உணவின் அளவானது, உங்களது உடலில் இருந்து கரைக்கப்படும் கலோரிகளின் அளவை விட அதிமாக இருக்க வேண்டியது அவசியம்.

3. பலமுறை சாப்பிட வேண்டும்

3. பலமுறை சாப்பிட வேண்டும்

உணவை மூன்று வேளைகள் மட்டும் சாப்பிடாமல், பிரித்து பிரித்து நான்கு அல்லது ஐந்து தடவைகள் சாப்பிட வேண்டும். மூன்று தடவைகளாவது ஆரோக்கியமான ஸ்நேக்ஸ்களை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

4. ஆரோக்கியமற்ற உணவுகள் வேண்டாம்

4. ஆரோக்கியமற்ற உணவுகள் வேண்டாம்

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, சோடாக்கள், பொரித்த உணவுகள், டோனட்டுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டாம். இவற்றை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்துவிடும்.

5. இதை சாப்பிடலாம்

5. இதை சாப்பிடலாம்

உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் உப்பு சேர்க்கப்படாத நட்ஸ், பழ சுமூத்திகள், முழு தானிய உணவுகள், முட்டை, பழ சாலட், காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். ஒருநாளைக்கு 150 மிலி சர்க்கரைக்கு மேல் சேர்க்க கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to increase weight in healthy ways

here are the some weight increasing tips
Story first published: Friday, September 8, 2017, 17:30 [IST]
Subscribe Newsletter