For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடலாமா? கூடாதா?

இங்கு காலை உணவாக பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

தற்போதைய அவசர உலகில் பலருக்கு காலையில் சாப்பிடக்கூட நேரமில்லை. அதுவும் இட்லி, தோசை, இடியாப்பம், அப்பம் போன்றவற்றை சமைத்து உட்கார்ந்து ருசித்து சாப்பிட நேரமின்றி பலர் பட்டினியாகவே அலுவலகத்திற்கு செல்கிறார்கள். ஒரு நாளின் முக்கிய உணவான காலை உணவை ஒருவர் தவிர்த்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Health Benefits of Having Fruits for Breakfast Everyday

முக்கியமாக பட்டினியாக ஒரு நாளை ஆரம்பிக்கும் போது, அன்றைய தினம் எந்த ஒரு செயலிலும் முழு கவனத்தையும் செலுத்தி செய்ய முடியாமல், சோம்பேறித்தனமாக நாள் முழுவதும் இருக்கக்கூடும். உங்களுக்கு காலையில் சமைத்து சாப்பிட நேரமில்லையா? அப்படியெனில் பழங்களை சாலட் செய்து சாப்பிடுங்கள்.

ஆம், காலை உணவாக பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். சரி, ஒருவர் காலை உணவாக பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆற்றல் மேம்படும்

ஆற்றல் மேம்படும்

பொதுவாக காலை உணவை உட்கொண்டாலே உடல் ஆற்றல் அதிகரிக்கும். அதிலும் பழங்களை காலை உணவாக சாப்பிடும் போது, அதிலிருந்து காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து கிடைத்து, உடலின் ஆற்றல் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்.

எடை குறையும்

எடை குறையும்

எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், காலையில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் பெர்ரிப் பழங்கள் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். டயட்டில் இருப்போருக்கு பழங்கள் மிகவும் சிறந்த உணவுப் பொருள். இதில் கலோரிகள் குறைவு மற்றும் அதில் உள்ள நார்ச்சத்துக்களால் நன்மைகளும் அதிகம் கிடைக்கும். அதிலும் ஆப்ரிக்காட், ஆப்பிள் மற்றும் மெலன் போன்ற பழங்களில் 50-க்கும் குறைவான கலோரிகள் உள்ளதால், அவற்றை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

பழங்களை காலை உணவாக உண்பதால், உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அனைத்து பழங்களிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவற்றை காலை உணவாக உண்ணும் போது, ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் அபாயம் தடுக்கப்பட்டு, உடலைத் தாக்கும் தொற்றுகள் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோயின் அபாயமும் குறையும்.

செரிமான ஆரோக்கியம்

செரிமான ஆரோக்கியம்

காலை வேளையில் பழங்களை சாப்பிடும் போது, உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். குறிப்பாக செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும். இதற்கு பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் தான் காரணம். இச்சத்து செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவற்றைத் தடுக்கும்.

தசை ஆரோக்கியம்

தசை ஆரோக்கியம்

உங்களுக்கு வாழைப்பழம் பிடிக்குமா? அப்படியெனில் அதை காலையில் சாப்பிடுங்கள். இதில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம், தசைகளின் வலிமையை அதிகரிக்கும். அதோடு, இந்த பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

பழங்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களுடன், நீர்ச்சத்து அதிகளவில் உள்ளதால், இது உடலை வறட்சியின்றி பராமரிக்கும். அதிலும் காலை உணவாக பழங்களை சாப்பிட்டால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்படலாம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

பழங்களை காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று இதயத்தின் செயல்பாடு மேம்பட்டு, இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். பழங்களில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துடன், சில பழங்களில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இதய நோய்களான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கப்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலை நோய்களை தாக்காமல் தடுக்கும். அந்த வகையில் பழங்களை ஒருவர் காலையில் சாப்பிடுவதால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும்.

காலை உணவாக பழங்களை சாப்பிடும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

#1

#1

காலையில் பழங்களை பலவாறு சாப்பிடலாம். உதாரணமாக ஒரு பௌல் ஓட்ஸ் உடன், பெர்ரிப் பழங்கள் மற்றும் கிவிப் பழங்களை சேர்த்து சாப்பிடலாம். இன்னும் சிறப்பான ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், பப்பாளி மற்றும் ஆப்பிளை ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.

#2

#2

காலை உணவாக நற்பதமான ஜூஸ் குடிக்க நினைத்தால், பெர்ரிப் பழங்கள் மற்றும் திராட்சையுடன் தயிர் சேர்த்து அரைத்து, இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து குடியுங்கள்.

#3

#3

உடல் ஆரோக்கியத்திற்கு சமநிலையில் அனைத்து சத்துக்களையும் பெற வேண்டும் என்பதை மறவாதீர்கள். அதற்கு காலையில் மாதுளை ஜூஸ் குடிப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Having Fruits for Breakfast Everyday

What kind of benefits we can get from consuming fruits while breakfast? Thus, you can check the information on health benefits of eating fruit for breakfast below.
Desktop Bottom Promotion