மாலையில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். உடல் நன்கு ஆரோக்கியமாகவும், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறவும், அன்றாடம் உடலுக்கு சிறிது உழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.

ஆனால் தற்போது பல ஆண்களுக்கும் சிக்ஸ் பேக் மீது அதிக நாட்டம் உள்ளதால், அதைப் பெற கடுமையான டயட் மற்றும் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியையும் செய்கின்றனர். ஆனால் பாடிபில்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இது சரியானதாக இருக்குமே தவிர, அலுவலக வேலை புரிபவர்கள் எதிலும் அளவாக இருப்பதே சிறந்தது.

சரி, இப்போது அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுமா, இல்லையா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீவிர எடை பயிற்சி

தீவிர எடை பயிற்சி

தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

ஆய்வு

ஆய்வு

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கலந்து கொண்டவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, அவர்களை பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடச் செய்து, அவர்களது தூக்கம், செயல்பாடு, மனநிலை போன்றவற்றை ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவு

ஆய்வின் முடிவு

ஒரு வார ஆய்விற்கு பின், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கோபம், டென்சன், மன இறுக்கம், சோர்வு, மனநிலையில் ஏற்றத்தாழ்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதிகமான அளவில் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால், உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் அளவு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. எப்போது உடலானது கடுமையாக அழுத்தத்திற்குட்படுகிறதோடு, அப்போது உடலில் மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலின் அதிகமாக வெளியிடப்பட்டு, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும்.

நோரெபினிஃப்ரைன்

நோரெபினிஃப்ரைன்

உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்யும் போது நோரெபினிஃப்ரைன் என்னும் ஹார்மோன் அதிகம் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன் இதயத் துடிப்பு, தசைகளில் இரத்த ஓட்டம் போன்றவற்றை அதிகரிப்பதோடு, மனதை விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ளும். மாலை வேளையில் இந்த ஹார்மோனின் அளவு அதிகம் இருந்தால், இரவில் தூக்கத்தைப் பெறுவது என்பது முடியாத ஒன்றாகிவிடும்.

கார்டிசோல்

கார்டிசோல்

மறுபுறம் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் அதிகமான வெளியீட்டால், தசைகள் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உடல் ஓய்வு பெறுவதைத் தள்ளிப் போட்டு, இரவு நேரத்தில் தூக்கத்தைப் பெற முடியாமல் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do Intense Exercises Kill Sleep?

What happens when you intensely exercise till the point of failure? Is it good? Well, not good for your sleep patterns. Surprised? Read this....
Please Wait while comments are loading...
Subscribe Newsletter