For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உஷார்...! சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை?

ஊதுவர்த்திகள் உண்டாக்கும் ஆபத்துகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல்களில் நச்சுத்தன்மை

செல்களில் நச்சுத்தன்மை

ஊதுவர்த்தியின் புகையானது செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது டி.என்.ஏ போன்ற மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைக்கலாம். இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொருப்பாகிறது.

சுவாசக்கோளாறை உண்டாக்குகிறது

சுவாசக்கோளாறை உண்டாக்குகிறது

ஊதுவர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது. இது சுவாசப்பாதைகளை நச்சுக்களை உருவாக்குகிறது. இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை.

நுரையிரல் பாதிப்பு

நுரையிரல் பாதிப்பு

காற்று மாசுபடுவதினால் நுரையிரலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது நுரையிரல் புற்றுநோய்க்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம். மேலும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.

ஆஸ்துமா அறிகுறிகள்

ஆஸ்துமா அறிகுறிகள்

காற்றை மாசுபடுத்தி, எரிச்சலூட்டுகிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகளை அதிகரிக்கிறது. இருமல் போன்றவற்றிற்கு காரணமாக உள்ளது.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

உங்களுக்கு காற்று மாசுபாட்டினால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்றவை உண்டாகும் என்றால், ஊதுவர்த்தி புகை உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை இழக்கச்செய்யும். இது சில சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

தள்ளியே இருங்கள்

தள்ளியே இருங்கள்

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், ஊதுவர்த்தி புகையை விட்டு சற்று தள்ளியே இருங்கள். இந்த புகை உங்களது சுவாசம் வழியாக சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

நரம்பியல் பிரச்சனை

நரம்பியல் பிரச்சனை

ஊதுவர்த்தியின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இதனை நீண்ட நாட்கள் சுவாசித்து கொண்டிருந்தால், நரம்பியல் பிரச்சனைகள் உண்டாகும். கற்றல் திறன் குறைபாடு மற்றும் நினைவாற்றல் குறையும்.

தலைவலி

தலைவலி

நீங்கள் மன அமைதிக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் பயன்படுத்தும் இந்த ஊதுவர்த்தி, உங்களுக்கு தலைவலி மற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

are incense sticks harmful

are incense sticks harmful
Story first published: Monday, August 14, 2017, 16:25 [IST]
Desktop Bottom Promotion