For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் யோகாக்கள்!

By Maha
|

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு யோகா நல்ல தீர்வைத் தரும். அதில் ஒன்று உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பது. கொழுப்புக்களானது உடலில் வயிற்றிக்கு அடுத்தப்படியாக தொடையில் சேரும்.

தொடையில் சேரும் கொழுப்புக்களை கரைப்பதற்கு ஒருசில யோகா நிலைகள் உதவும். அந்த யோகாக்களை தினமும் தவறாமல் செய்து வந்தால், தொடையை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள முடியும்.

சரி, இப்போது தொடையில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் சில யோகாக்களைப் பார்ப்போம். அதைப் படித்து அன்றாடம் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்கராசனம்

சக்கராசனம்

இந்த ஆசனம் தொடையில் உள்ள கொழுப்புக்களை மட்டுமின்றி, வயிற்றில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களையும் கரைக்கும். இந்த ஆசனம் செய்ய, முதலில் தரையில் படுத்து கால்களை பிட்டத்திற்கு அருகே இருக்குமாறு மடக்கி, கைகளை தலைக்கு பின்புறம் ஊன்றி, படத்தில் காட்டியவாறு உடலை மேலே தூக்க வேண்டும். இப்படி 30 நொடிகள்-1 நிமிடம் வரை இருக்க வேண்டும். முக்கியமாக இந்நிலையை தினமும் 5 முறை செய்து வர வேண்டும்.

புஜங்காசனம்

புஜங்காசனம்

இந்த ஆசனம் செய்ய, தரையில் குப்புற படுத்து, கைகளை மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் ஊன்றி, படத்தில் காட்டியவாறு தலை மற்றும் மார்பு பகுதியை மேல் நோக்கித் தூக்க வேண்டும். இப்படி செய்வதனால் உங்கள் அடிவயிறு, தொடை போன்றவை ஃபிட்டாகும்.

தனுராசனம்

தனுராசனம்

இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, படத்தில் காட்டியவாறு உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இந்த ஆசனத்தை தினமும் செய்தால், தொப்பை குறைவதோடு, தொடையில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

பஸ்சிமோத்தாசனம்

பஸ்சிமோத்தாசனம்

இந்த யோகா பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றலாம். ஆனால் மிகவும் கடினமானது. அதற்கு தரையில் உட்கார்ந்து, கால்களை முன்னோக்கி நீட்டி, கைகளால் பெருவிரலைப் பிடித்து, நெற்றியால் முழங்காலைத் தொட வேண்டும். இந்த ஆசனத்தை 4-5 முறை தினமும் செய்ய வேண்டும்.

மாலாசனம்

மாலாசனம்

இந்த ஆசனத்திற்கு முதலில் கால்களை 12 இன்ச் அகலத்தில் விரித்து நேராக நின்று, பின் படத்தில் காட்டியவாறு வணக்கம் கூறிய நிலையில் அமர வேண்டும். இப்படி 5 முறை செய்து வர, தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Poses To Slim Down Thighs

Here are some yoga poses to slim down thighs. Read on to know more...
Story first published: Friday, February 19, 2016, 17:59 [IST]
Desktop Bottom Promotion