ஏன் தினமும் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

உடலின் பெரும் பகுதி நீரால் நிறைந்தது. மேலும் உடலுறுப்புக்கள் சீராக செயல்படுவதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒருவரால் 40 நாட்கள் வரை உணவின்றி வாழ முடியும், ஆனால் நீரின்றி வாழ முடியாது. 2 நாட்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலே, பல தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே உடல் ஆரோக்கியமாகவும், சீராகவும் செயல்பட தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டியது அவசியம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

குறிப்பாக இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தினமும் இரவில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலில் நீர்ச்சத்து சீராக வைத்துக் கொள்ளப்படும்

உடலில் நீர்ச்சத்து சீராக வைத்துக் கொள்ளப்படும்

உடல் வறட்சியடைவதைத் தடுக்க சிறந்த வழி தண்ணீர் குடிப்பது தான். அதிலும் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து சீராகப் பராமரிக்கப்படும். பகலில் தண்ணீர் குடிப்பது போல, இரவில் நம்மால் தண்ணீர் குடிக்க முடியாது. இருந்தாலும் இரவில் உடலுறுப்புக்களின் செயல்பாடு அதிகம் இருக்காது என்பதால், அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. இருப்பினும் தூங்குவதற்கு முன் 1 டம்ளர் தண்ணீர் குடிப்பதால், மறுநாள் காலையில் எழும் போது நல்ல புத்துணர்ச்சியை உணரக்கூடும்.

டாக்ஸின்கள் நீங்கும்

டாக்ஸின்கள் நீங்கும்

தண்ணீரை விட உடலை சுத்தம் செய்ய சிறந்தது எதுவும் இருக்க முடியாது. எனவே தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதுடன், இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடியுங்கள். இதனால் பகல் நேரத்தை விட, இரவில் உடல் சுத்தமாவதற்கு போதிய அளவு நேரம் கிடைப்பதால், டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் வேகமாக சுத்தமாகும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

நல்ல தூக்கம் கிடைக்கும்

தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதன் மூலம், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம். எப்படியெனில் இரவில் குடிக்கும் தண்ணீர் உடலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இரவில் உடல் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருப்பதால், தண்ணீரானது உடலின் மூலை முடுக்குகளுக்குச் செல்லும்.

எடையைக் குறைக்க உதவும்

எடையைக் குறைக்க உதவும்

தண்ணீரில் கலோரிகள் சுத்தமாக இல்லை, சுவையில்லை மற்றும் வேறு எதுவும் இல்லை. ஆனால் இது உடலை சீரான இயக்கத்தில் செயல்பட செய்யும். அதிலும் இரவில் குளிர்ந்த நீரைக் குடித்தால், கலோரிகள் எரிக்கப்படும். இப்படி கலோரிகள் எரிக்கப்பட்டால், உடல் எடை தானாக குறையும்.

தசைப்பிடிப்புக்களைத் தடுக்கும்

தசைப்பிடிப்புக்களைத் தடுக்கும்

இரவில் படுக்கும் போது நிறைய பேர் தசைப்பிடிப்புக்களால் அவஸ்தைப்படுவார்கள். இப்படி ஏற்படுவதற்கு காரணம் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாததால் தான். உங்களுக்கு இப்படி அடிக்கடி இரவில் தசைப்பிடிப்புக்கள் ஏற்பட்டால், தூங்கும் முன் தண்ணீர் குடித்து வாருங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்பட்டு, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

மூட்டுப் பிரச்சனைகள் அகலும்

மூட்டுப் பிரச்சனைகள் அகலும்

இரவில் தான் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்வதால், படுக்கும் முன் தண்ணீர் குடிப்பதன் மூலம், நாள் முழுவதும் கடினமாக வேலை செய்த தசைகள் மற்றம் மூட்டுகள் ரிலாக்ஸ் அடைந்து, அப்பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Should You Drink Water Before Going To Bed?

Water constitutes a major portion of our body. It is essential for the proper functioning of all our organs. Why you should drink water before going to bed? Read on to know more...
Subscribe Newsletter