For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

By Maha
|

காய்கறிகளில் பச்சையாக விரும்பி சாப்பிடும் வண்ணம் இருப்பது கேரட். இந்த கேரட் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சிலருக்கு கேட்டை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

மேலும் கேரட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை ஜூஸ் செய்து தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும் மற்றும் சருமத்தின் அழகும் மேம்படும்.

உங்களுக்கு கேரட் ஜூஸை தினமும் காலையில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே உங்கள் வீட்டில் யாரேனும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் காலையில் கேரட் ஜூஸைக் கொடுத்து வாருங்கள்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

கேட்டில் வைட்டமின் ஏ வளமாக உள்ளது. இது உடலின் உள்ளுறுப்புக்களைச் சுற்றி ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, நோய்க்கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்கும். மேலும் கேரட் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிவது குறைந்து, இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

கேரட்டில் உள்ள பொட்டாசியம், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கச் செய்யும். மேலும் இது கல்லீரலுக்கும் நல்லது. எனவே உங்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் கேரட் ஜூஸை குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

கேரட்டில் பொட்டாசியத்துடன், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்றவையும் வளமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புத் தரும்.

அமிலத்தன்மை குறையும்

அமிலத்தன்மை குறையும்

உடலில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

கேரட் ஜூஸை அன்றாடம் குடித்து வருபவர்களுக்கு கண் பிரச்சனைகள் வரும் அபாயம் குறைவாக இருக்கும். இதற்கு கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடின் தான் காரணம்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின், தினமும் காலையில் கேரட் ஜூஸில் பசலைக்கீரை ஜூஸை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகள்

கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிட்ன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய்

ஆய்வுகளில் தினமும் கேரட்டை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸை தினமும் குடித்து வாருங்கள்.

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள்

தினமும் கேரட் ஜூஸை குடிப்பதால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகி, அவற்றின் செயல்பாடு வேகப்படுத்தப்படும்.

இரத்த சோகை

இரத்த சோகை

கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், உடலில் இரத்தணுக்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு இது நல்ல தீர்வை வழங்கும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு நல்லது

புகைப்பிடிப்பவர்களுக்கு நல்லது

புகைப்பிடிப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருதன் மூலம், சிகரெட்டினால் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும் என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக புகைப்பிடிப்பதை நிறுத்தாமல் இருக்காதீர்கள். முடிந்த வரையில் சீக்கிரம் நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Will Happen When You Drink Carrot Juice Every Morning

Do you know what will happens when you drink carrot juice every morning? Read on to know more...
Desktop Bottom Promotion