For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

By Maha
|

அக்காலத்தில் நம் முன்னோர்கள் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கண்டு வந்தார்கள். ஆனால் தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினால் பலரும் தங்களது உடலில் ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கும் மருத்துவரை சந்தித்து பணம் செலவழித்து சிகிச்சை எடுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இக்கால தலைமுறையினருக்கு நாட்டு வைத்தியத்தின் மீது அதிக நம்பிக்கை இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், உண்மையில் நாட்டு வைத்தியத்தை விட சிறந்த வைத்தியம் வேறு எதுவும் இல்லை. இருப்பினும் நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களை இக்கால தலைமுறையினருக்கு எடுத்துரைப்பது நமது கடமை.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நம் முன்னோர்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பை எப்படி பயன்படுத்தி வந்தனர் என்பது குறித்தும், அவை எந்தெந்த பிரச்சனைகளைக் குணப்படுத்தும் என்றும் கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்கடைப்பு

மூக்கடைப்பு

வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதால், உடலினுள் வெப்பம் தூண்டப்பட்டு, சுவாசக் குழாய்களில் உள்ள அழற்சிகள் நீக்கப்பட்டு, மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொண்டைப்புண்

தொண்டைப்புண்

தொண்டைப்புண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பித்தக்கற்கள்

பித்தக்கற்கள்

பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்தக்கற்கள் கரையும்.

எடை குறையும்

எடை குறையும்

தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

பல் வலி

பல் வலி

பல் வலியால் கஷ்டப்படுபவர்கள், இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை கிருமிகளை அழித்து, பல் வலியில் இருந்து நிவாரணம் தரும்.

காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சல் இருக்கும் போது, சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலைத் தாக்கிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாகலாம்.

குமட்டல்

குமட்டல்

உப்பு மற்றும் மிளகுத் தூள் வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்க்கச் செய்யும், எலுமிச்சையின் மணம் குமட்டலைக் குறைக்கும். மொத்தத்தில் இந்த கலவையை எடுத்து வர வயிற்றுப் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Salt, Pepper And Lemon Mixture Can Do To Your Body

If you are looking for a mixture of kitchen ingredients that can help you treat 7 diseases, then try salt, pepper and lemon...
Story first published: Friday, June 3, 2016, 10:42 [IST]
Desktop Bottom Promotion