உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக இரத்த அழுத்த பிரச்சனை அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும். அதிலும் உயர் இரத்த அழுத்தம் தான் மிகவும் மோசமானது. இதற்கு மக்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று சரியாக தெரியாமல் இருப்பது தான் காரணம். உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமாக அன்றாடம் நாம் சந்திக்கும் ஓர் தலைவலி போன்ற சிறு பிரச்சனையாக இருப்பதால், பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அப்படியே விட்டுவிடுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் 7 யோகாசனங்கள்!

இவ்வாறு இருந்தால், பின் உயர் இரத்த அழுத்தம் தீவிரமாகி, கட்டுப்படுத்த முடியாமல், மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றால் உயிரை இழக்க நேரிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உயர் இரத்த அழுத்தத்தின் சில அசாதாரண அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து இனிமேல் அந்த அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை சாதாரணமாக விடாதீர்கள்.

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்கில் இரத்த வடிதல்

மூக்கில் இரத்த வடிதல்

திடீரென்று மூக்கில் இரத்தம் வழிகிறதா? இதுவரை உங்களுக்கு மூக்கில் இருந்து இரத்தம் வந்ததில்லையா? அப்படியெனில் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள். ஏனெனில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.

தலைவலி

தலைவலி

இப்பிரச்சனையைக் கண்டிப்பாக 90 சதவீத மக்கள் சந்தித்திருப்பார்கள். ஆனால் அந்த தலைவலி தினமும் ஏற்பட்டால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். எனவே உங்களுக்கு தலைவலி தினமும் தொடர்ந்து ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

மூச்சு விடுவதில் சிரமம்

மூச்சு விடுவதில் சிரமம்

சமீப காலமாக உங்களால் சரியாக மூச்சு விட முடியவில்லையா? அப்படியெனில் உடனே உஷாராகுங்கள். ஏனெனில் உயர் இரத்த அழுத்தத்தினால் இதயத்தில் வேலைப்பளு அதிகரித்து, அதனால் சீராக இரத்தத்தை நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்த முடியாமல் உள்ளது.

தலைச்சுற்றல் மற்றும் மிகுந்த சோர்வு

தலைச்சுற்றல் மற்றும் மிகுந்த சோர்வு

நுரையீரலுக்கு போதிய அளவில் இரத்தம் கிடைக்காமல், மூளை மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனால், உடலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, தலைச்சுற்றல் மற்றும் மிகுதியான சோர்வை சந்திக்க நேரிடும். எனவே உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பார்வை கோளாறு

பார்வை கோளாறு

உங்களுக்கு திடீரென்று பார்வையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? எந்த ஒரு பொருளும் சரியாக தெரியவில்லையா? அனைத்தும் ஒருவிதமாக மங்கலாக தெரிகிறதா? அப்படியெனில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே பார்வையில் பிரச்சனையை சந்தித்தால் தாமதிக்காமல், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Please Wait while comments are loading...
Subscribe Newsletter