நீங்கள் மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் மன அழுத்தம் அல்லது மன இறுக்கத்தால் அவஸ்தைப்படுகின்றனர். ஆனால் அப்பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமல் பலரும் உள்ளனர். ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் எப்போதும் ஒருவித சிந்தனையுடன் இருப்பது போன்றும், கவலையுடனும் காணப்படுவார்கள்.

சிலருக்கு மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறியே தெரியாது. ஆனால் அசாதாரண அறிகுறிகள் கொண்டு ஒருவர் மன அழுத்தத்தில் தான் உள்ளாரா என்பதை அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோபம்

கோபம்

எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறதா? சிறு விஷயத்திற்கும் அதிக கோபப்படுகிறீர்களா? அப்படியெனில் நீங்கள் மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

மது அதிகம் குடிப்பது

மது அதிகம் குடிப்பது

ஒரே இரவில் எழுந்து நடக்க முடியாத அளவில் எப்போதும் குடிக்கிறீர்களா? ஒவ்வொரு டம்ளர் குடித்த பின்னரும் ரிலாக்ஸ் அடைவது போன்று உணர்கிறீர்களா? அப்படியெனில் எதிர்மறை எண்ணங்களால் உங்கள் மனம் நிரம்பி வழிகிறது என்று அர்த்தம்.

சமூக வலைதளங்களில் இருப்பது

சமூக வலைதளங்களில் இருப்பது

வழக்கத்திற்கு மாறாக சமூக வலைத்தளங்களில் நேரத்தை அளவுக்கு அதிகம் செலவிட்டால், நிச்சயம் அத்தகையவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்தம்.

பகல்கனவு காண்பது

பகல்கனவு காண்பது

நீங்கள் அடிக்கடி பகல் கனவு காண்பீர்களா? பொதுவாக ஒருவரது மனம் தற்போதைய தருணத்தில் உள்ளோதோ, அப்போது சந்தோஷமாகவும், அதுவே மனம் எதையேனும் யோசித்தவாறு இருந்தால், அது மன அழுத்தத்தையும் உண்டாக்கும்.

தீர்வு எடுக்க முடியாமல் இருப்பது

தீர்வு எடுக்க முடியாமல் இருப்பது

உங்களால் எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வு காண முடியாமல் இருந்தால், நீங்கள் மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

அன்றாட வழக்கங்களை மறப்பது

அன்றாட வழக்கங்களை மறப்பது

தினமும் பின்பற்றி வரும் பழக்கங்களை மறந்து, ஏதோ ஒரு உலகில் இருந்தால், நீங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Uncommon Signs Of Depression

Here are some uncommon signs of depression. Read on to know more.
Story first published: Tuesday, October 4, 2016, 18:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter