Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
தசைப்பிடிப்புக்கள் மற்றும் எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்க இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...
அடிக்கடி தசைப்பிடிப்புக்கள் ஏற்பட்டால் மற்றும் உங்கள் எலும்புகள் பலவீனமாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை ஒரு டம்ளர் குடியுங்கள். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
தற்போது பலருக்கும் எலும்புகள் மற்றும் தசைகள் பலவீனமாக உள்ளது. இதனால் அடிக்கடி தசைப்பிடிப்புக்கள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏராளமான மக்கள் சந்திக்கின்றனர்.

நீங்களும் அடிக்கடி தசைப்பிடிப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்பட்டால், அதற்காக பல மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு அற்புத பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

செய்முறை #1
முதலில் ஒரு சிறிய கட்டு பசலைக்கீரையை எடுத்துக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் 5-6 பாதாம் பருப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு 1/2 கப் ஓட்ஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
அடுத்து 1/2 கப் அன்னாசிப் பழத் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #5
இறுதியில் ஆளி விதைகளை சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #6
மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

நன்மைகள்
இந்த பானத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இந்த பானத்தை எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் குடித்து வர, பிரச்சனைகள் நீங்குவதோடு, தசைப் பிடிப்புக்களும் நீங்கும்.



Click it and Unblock the Notifications
