சிறுநீரகம் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் அற்புத ஜுஸ் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்கும் கற்றாழையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியும். பல நூற்றாண்டுகளாக கற்றாழை பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சரிசெய்யும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு மற்றும் இஞ்சிக்கு அடுத்தப்படியாக, உலகில் மருத்துவ குணம்மிக்க பொருளாக முக்கிய இடத்திலும் கற்றாழை உள்ளது.

This Mixture Purifies Your Blood

நிறைய பேர் கற்றாழையை சருமத்திற்கு தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இதனை ஜூஸ் செய்து குடிக்கலாம். இதனால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, இரத்தமும் சுத்தமாகும்.

இக்கட்டுரையில், அந்த கற்றாழையை அன்னாசிப் பழத்துடன் சேர்த்து பயன்படுத்துவது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

அன்னாசி பழச்சாறு - 1 டம்ளர்

கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1

புதினா - சிறிது

தண்ணீர் - 1/2 கப்

தயாரிப்பது எப்படி?

தயாரிப்பது எப்படி?

முதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை மிக்ஸி அல்லது பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1/2 கப் நீர் சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பின்பு அதோடு எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து விட வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

அடுத்து அத்துடன் அன்னாசிப் பழச்சாற்றினை சேர்த்து நன்கு கலந்தால், ஜூஸ் ரெடி!

நன்மை #1

நன்மை #1

கற்றாழை இயற்கையாகவே அல்கலைன் தன்மை கொண்டது. இது உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, செரிமான மண்டலத்தை சீராக செயல்பட செய்யும் மற்றும் குடலியக்கப் பிரச்சனைகளைத் தடுக்கும்.

நன்மை #2

நன்மை #2

இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேறச் செய்வதுடன், சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, சிறுநீரகங்களையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

நன்மை #3

நன்மை #3

கற்றாழை அன்னாசி ஜூஸ் உட்காயங்களைக் குறைக்கும் மற்றும் குறிப்பிட்ட வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Mixture Purifies Your Blood

Have you tried the aloe vera and pineapple mixture? Well, read on to know about the benefits of aloe vera and pineapple mixture....
Story first published: Saturday, October 8, 2016, 12:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter