ஆண்களே! ஆண்மையின்மையைத் தடுக்க இந்த பகுதிகளில் தினமும் அழுத்தம் கொடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் ஆண்கள் பாலியல் உறவில் ஈடுபட முடியாமல் திணறுகின்றனர். இதனால் பல ஆண்களின் தன்னம்பிக்கை குறைவதோடு மற்றும் சுய மரியாதை உடைகிறது. குறிப்பாக நிறைய ஆண்கள் முன்கூட்டியே விந்துதள்ளல் மற்றும் விறைப்புத்தன்மை குறைபாட்டால் தான் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

இதற்கு முதன்மை காரணம் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் தான். அதுவும் மன அழுத்தம் என்னும் கொடிய கிருமி தான், ஒரு ஆணின் பாலியல் வாழ்க்கையில் பெரும் இடையூறை ஏற்படுத்தி, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுக்கிறது.

இந்த பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதை விட, அக்குபிரஷர் முறையை கையாண்டால், எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் தடுக்கலாம்.

இங்கு பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும் சில அழுத்தப்புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆண்கள் தினமும் மேற்கொண்டால், பாலியல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுத்தப்புள்ளி #1

அழுத்தப்புள்ளி #1

பாதத்தின் மையப்பகுதியான உள்ளங்காலில் பெருவிரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுப்பதன் மூலம், விறைப்புத்தன்மை குறைபாட்டை மட்டுமின்றி, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல், கழுத்து வலி, தலை வலியையும் சரிசெய்யும். முக்கியமாக அழுத்தம் கொடுக்கும் போது ஆழமாக மூச்சு விட வேண்டும். அதோடு இரண்டு உள்ளங்காலிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அழுத்தப்புள்ளி #2

அழுத்தப்புள்ளி #2

முழங்காலுக்கு சற்று கீழே அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இனப்பெருக்க மண்டலத்தின் வலிமை தூண்டப்படுவதோடு, ஒட்டுமொத்த உடலும் வலிமைப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி இந்த இடத்தில் கொடுக்கப்படும் அழுத்தம் மன அழுத்தம், முழங்கால் வலி, சளி, ஆஸ்துமா, தூக்கமின்மை, மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளையும் குணமாக்கும்.

அழுத்தப்புள்ளி #3

அழுத்தப்புள்ளி #3

இந்த முக்கியமான பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தம் ஆண்மையின்மையைப் போக்கும். தொப்புளில் இருந்து 4 இன்ச் கீழே அமைந்துள்ள இப்பகுதியில் கொடுக்கும் அழுத்தம் சிறுநீரக பிரச்சனைகள், ஆண்மையின்மை, வயிற்றுப்போக்கு, பலவீனம், சோர்வு, முதுகு வலி மற்றும் மாதவிடாய் கால பிரச்சனைகளையும் சரிசெய்யும். இப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது ஆழ்ந்த மூச்சு விட்டவாறு, இரு விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அழுத்தப்புள்ளி #4

அழுத்தப்புள்ளி #4

படத்தில் காட்டப்பட்டுள்ள இடங்களில் 2 நிமிடம் ஆழமாக மூச்சு விட்டவாறு, அழுத்தம் கொடுத்தால், சிறுநீர் கழிப்பின் போது ஏற்படும் வலி மற்றும் விறைப்புத்தன்மை பிரச்சனை குணமாகும்.

அழுத்தப்புள்ளி #5

அழுத்தப்புள்ளி #5

படத்தில் காட்டப்பட்ட இரு இடத்தில் அழுத்தம் கொடுக்கும் போது, ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள கோளாறுகள் சரிசெய்யப்படுவதோடு, மோசமான பாலுணர்ச்சி, சோர்வு மற்றும் டென்சன் போன்றவையும் சரிசெய்யப்படும். அதற்கு இந்த பகுதிகளில் 1 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், பல் வலி, சர்க்ககரை நோய், தூக்கமின்மை, சளி மற்றும் தலைவலியும் சரியாகும்.

அழுத்தப்புள்ளி #6

அழுத்தப்புள்ளி #6

இந்த புள்ளி தொப்புளுக்கு கீழே உள்ளது. இவ்விடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுப்பதால், இனப்பெருக்க கோளாறுகள் மற்றும் ஹெர்னியா சரிசெய்யப்படும். அதோடு உடல் சோர்வு, செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகளும் குணமாகும்.

அழுத்தப்புள்ளி #7

அழுத்தப்புள்ளி #7

மேல் உடலும், காலும் இணையும் இடத்தில் 1 நிமிடம் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவாறு அழுத்தம் கொடுக்கும் போது, மலட்டுத்தன்மை பிரச்சனை நீங்கி, கருவளம் மேம்படும் மற்றும் தொடைகளில் இருக்கும் வலியும் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Acupressure Points To Treat Impotence

How to treat impotence using acupressure? Well, there are certain acupressure points to treat impotence. You may need to stimulate those points by pressing.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter