தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரிச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அதிலும் தினமும் 3 பேரிச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. இங்கு தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் சிறிது முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்

போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.

செரிமான கோளாறுகள் நீங்கும்

செரிமான கோளாறுகள் நீங்கும்

பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் 3 உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறந்த வலி நிவாரணி

சிறந்த வலி நிவாரணி

பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.

ஆரோக்கியமான பிரசவம்

ஆரோக்கியமான பிரசவம்

69 கர்ப்பிணிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், பிரசவம் நடைபெறுவதற்கு 4 வாரத்திற்கு முன்பிருந்து தினமும் 3 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்த பெண்களுக்கு பிரசவம் எளிமையாக நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. மேலும் பேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பக்கவாதம்

பக்கவாதம்

முக்கியமாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம்.

மூளையின் செயல்பாடு மேம்படும்

மூளையின் செயல்பாடு மேம்படும்

யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும்

இரத்தணுக்கள் அதிகரிக்கும்

பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

See What Happens To Your Body When You Eat 3 Dates Daily

If you start eating three dates a day, here is what you will start to see. Take a look...
Story first published: Tuesday, June 14, 2016, 10:50 [IST]
Subscribe Newsletter