மூட்டு வலிகளுக்கு காரணமான யூரிக் அமில தேக்கத்தை நீக்கும் அற்புத ஜூஸ்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று நிறைய மக்கள் கடுமையான மூட்டு வலியால் அவஸ்தைப்படுகின்றனர். இதன் காரணமாக நடக்க முடியாமல், எதையும் தூக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு மருத்துவரிடம் சென்றால், அவரோ சாப்பிட முடியாத அளவில் கண்ட கண்ட மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார்கள்.

Remove Uric Acid From Your Body And Reduce Joint Pain With This Excellent Juice!

தாங்க முடியாத அளவில் மூட்டு வலிகள் ஏற்படுவதற்கு மூட்டுக்களில் யூரிக் அமிலத்தின் தேக்கம் தான் காரணம். இதனை வெளியேற்றும் முயற்சியில் அவ்வப்போது ஈடுபட்டால், நிச்சயம் மூட்டு வலியில் இருந்து விரைவில் விடுபடலாம். இங்கு யூரிக் அமில தேக்கத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

கிரேப் ஃபுரூட் - 1

அன்னாசிப் பழத் துண்டுகள் - 1 கப்

வெள்ளரிக்காய் - 1

இஞ்சி - 2 இன்ச்

தண்ணீர் - தேவையான அளவு

பப்பளிமாஸ்/கிரேப் ஃபுரூட்

பப்பளிமாஸ்/கிரேப் ஃபுரூட்

இந்த பழத்தில் வைட்டமின் சி ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது உடலினுள் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அசௌகரியத்தை எதிர்த்துப் போராடி நல்ல நிவாரணம் வழங்கும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்னும் பொருள் உள்ளது. இது வலியைக் குறைப்பதுடன், உட்காயங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும், ஆர்த்ரிடிஸை எதிர்க்கும் மற்றும் யூரிக் அமில தேக்கத்தைக் குறைக்க உதவும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள், உட்காயங்களைக் குறைப்பதுடன், உடலில் உள்ள டாக்ஸின்களையும் வெளியேற்றும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார்!

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

இந்த பானத்தை ஒருவர் தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வர, விரைவில் மூட்டு வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remove Uric Acid From Your Body And Reduce Joint Pain With This Excellent Juice!

The given below juice remove uric acid from your body and reduce joint pain. Read on to know more...
Subscribe Newsletter