Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Mars Saturn Conjunction On 02 April 2026: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.
தற்போது செவ்வாய் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 02 ஆம் தேதி செவ்வாய் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

குறிப்பாக ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் வேறு சில ராசிக்காரர்களும், இச்சேர்க்கையின் தாக்கத்தை சந்திக்க நேரிடும். இப்போது மீன ராசியில் ஒன்றிணையும் சனி செவ்வாயால் ஏப்ரல் மாதத்தில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாத தொடக்கமானது சற்று கடினமாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக பண விஷங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. காதல் விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் உறவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மன குழப்பத்துடன் இருக்க நேரிடும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படக்கூடும். எது சரி, எது தவறு என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், உடனே மனம் தளராமல், நேர்மறையான எண்ணங்களுடனும், விழிப்போடும் இருங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகளை முடிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். செய்யும் வேலைகளில் பல தடைகளை சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மன ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
சனி-செவ்வாய் சேர்க்கையின் மோசமான விளைவுகளை தடுக்க செய்ய வேண்டியவைகள்
சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க "ஓம் நமச்சிவாய நமஹ" மற்றும் "ஓம் நமோ நாராயணாய நமஹ" என்னும் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். மேலும் இந்த சேர்க்கை காலத்தில் வழக்கமான முறையில் செயல்படாமல், புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். மற்றவர்களை சார்ந்து இருக்காமல் சுயமாக சிந்தித்து செயல்பட தொடங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


