பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இதுவரை பல கட்டுரைகளில் நட்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று படித்திருப்பீர்கள். ஆனால் அந்த நட்ஸை எப்படி சாப்பிட்டால், அதன் முழு நன்மைகளையும் பெற முடியும் என்று நீங்கள் படித்த கட்டுரைகளில் சொல்லி இருக்கமாட்டார்கள். இந்த கட்டுரையில், பாதாமை சரியான வழியில் சாப்பிடும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

Reasons Why You Should Eat Soaked Almonds

மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடுகையில், பாதாம் அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. இந்த பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.

சரி, இப்போது பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம்

செரிமானம்

பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.

கெட்ட கொலஸ்ட்ரால்

கெட்ட கொலஸ்ட்ரால்

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

 எடை குறையும்

எடை குறையும்

பாதாமில் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

புற்றுநோய்

புற்றுநோய்

ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

பிறப்பு குறைபாடுகள்

பிறப்பு குறைபாடுகள்

கர்ப்பிணிகள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் ஃபோலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். ஃபோலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why You Should Eat Soaked Almonds

Do you want to know why you should soak and eat almonds? Read here to learn more about it.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter