முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்களை வலிமைப்படுத்த இத ஒரு டம்ளர் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலில் முழங்கால் மூட்டுகள் தான் மிகவும் முக்கியமானது. முழங்கால் மூட்டுகள் தான் உடலுக்கு சரியான நிலையை வழங்கி, நடக்கவும், குதிக்கவும், நிற்கவும் உதவுகிறது. நாட்கள் செல்ல செல்ல முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்கள் பாதிக்கப்படும்.

முழங்கால் வலிக்கான சில பொதுவான கை வைத்தியங்கள்!

தசைநாண்கள் என்பது தசைகளையும் எலும்புகளையும் இணைக்கும் ஓர் கடினமான நார் பட்டையாகும். இது பாதிக்கப்பட்டால் தான், கடுமையான மூட்டு வலிகளை சந்திக்கக்கூடும். தசைநாண்கள் வலிமையுடன் இல்லாவிட்டால், அதனால் ஒருவர் எந்த ஒரு செயலையும் வேகமாக செய்ய முடியாது.

சில நிமிடங்களில் மூட்டு வலியை மாயமாய் மறையச் செய்யும் அற்புத எண்ணெய்!

ஆனால் இந்த தசைநாண்கள் ஓர் அற்புதமான ஸ்மூத்தியின் மூலம் வலிமையாக்க முடியும். இங்கு அந்த ஸ்மூத்தி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள்

சத்துக்கள்

இந்த ஸ்மூத்தியில் மக்னீசியம், புரோமிலைன், சிலிகான் மற்றும் வைட்டமின் சி போன்ற நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் உள்ளது. இதனால் முழங்காலில் உள்ள வலி குறைந்து, தசைநாண்களுக்கு மட்டுமின்றி உடலுக்கும் நல்ல வலிமையையும், ஆற்றலையும் வழங்கும்.

ஸ்மூத்தியின் நன்மை

ஸ்மூத்தியின் நன்மை

இந்த ஸ்மூத்தி தசைநாண்களில் இயற்கையான உயவுப்பொருளை வழங்கி, தசைநாண்கள் அதிகம் உராய்ந்து கிழிவது தடுக்கப்பட்டு, முழங்காலில் உள்ள தசைநார்களை வலிமைப்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

அன்னாசித் துண்டுகள் - 2 கப்

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

ஓட்ஸ் பவுடர் - 1 கப்

தண்ணீர் - 250 மிலி

தேன் - 40 கிராம்

பட்டை - 7 கிராம்

பாதாம் - 40 கிராம்

செய்முறை:

செய்முறை:

* முதலில் ஓட்ஸை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அன்னாசியை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மிக்ஸியில் ஆரஞ்சு ஜூஸ், தேன், பாதாம், பட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதில் வேக வைத்த ஓட்ஸ் மற்றும் அன்னாசிப் பழச்சாற்றினை ஊற்றி மீண்டும் நன்கு அரைத்து, ஐஸ் கட்டிகளைச் சேர்த்து பரிமாற வேண்டும்.

எடுக்கும் முறை

எடுக்கும் முறை

இந்த ஸ்மூத்தியை மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், மூட்டு பிரச்சனைகள் நீங்குவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

குறிப்பு

குறிப்பு

மூட்டு பிரச்சனைகளுக்கு ஏற்கனவே மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவர்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த பானத்தைப் பருகக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pineapple, Cinnamon And Oats Smoothie For Strengthening The Tendons And Ligaments In You Knees

Pineapple, Cinnamon And Oats Smoothie For Strengthening The Tendons And Ligaments In You Knees. Read on to know more...