தூங்கும் முன் இந்த இடத்தில் அழுத்தம் கொடுப்பதால், உடலினுள் ஏற்படும் அற்புத மாற்றம்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது நிறைய பேர் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகின்றனர். தூக்கமின்மையால் கஷ்டப்படுபவர்களது உடலில் ஒரு நாளைக்கு வேண்டிய போதிய ஆற்றல் கிடைக்காமல் இருப்பதால், அவர்களால் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது.

இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு பல தீர்வுகள் இருக்கலாம். அதில் ஒன்று அக்குபிரஷர் என்னும் சைனீஸ் வைத்தியம். இந்த வைத்தியப் படி, உடலில் பல்வேறு உறுப்புக்களுடன் தொடர்பைக் கொண்ட அழுத்தப்புள்ளிகளை கண்டறிந்து, அழுத்தம் கொடுத்து சரிசெய்யப்படும். இப்போது நாம் தூக்கமின்மைக்கான அக்குபிரஷர் முறையைத் தான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுத்தப் புள்ளிகள்

அழுத்தப் புள்ளிகள்

தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க 3 இடத்தில் அழுத்தம் கொடுத்தால் சரியாகும். அது தான் LV3, P6 மற்றும் K1.

LV3

LV3

LV3 என்பது காலில் உள்ள பெருவிரலுக்கும், இரண்டாம் விரலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் 30 நொடிகள் அழுத்தம் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனை மட்டுமின்றி, உடலில் உள்ள இதர பிரச்சனைகளும் குணமாகும்.

P6

P6

P6 என்பது படத்தில் காட்டியவாறு, மணிக்கட்டு பகுதியில் மூன்று விரல்களை வைத்து, அதற்கு மேல் உள்ள பகுதி ஆகும். இந்த இடத்தில் அழுத்தத்தைக் கொடுக்கும் போது, தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

K1

K1

K1 என்பது பாதத்தின் அடிப்பகுதியில், படத்தில் காட்டப்பட்ட பகுதியாகும். இந்த இடத்தில் 30 நொடிகள் அழுத்தம் கொடுத்து, பின் 5 நொடிகள் ரிலாக்ஸ் செய்து, மீண்டும் 30 நொடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

செய்யக்கூடாதவைகள்

செய்யக்கூடாதவைகள்

தூக்கமின்மைக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது, பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு மது அருந்துதல், காப்ஃபைன் பானங்களை பருகுவது, புகைப்பிடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும் இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If You Press This Point On Your Foot Before Bed, This Is What It Does To Your Body

If you press this point on your foot before bed, this is what it does to your body. Read on to know more...
Story first published: Friday, November 18, 2016, 17:45 [IST]
Subscribe Newsletter