உடம்பைக் குறைக்க முத்தான இரவு உணவு யோசனைகள் !

By: Srinivasan P M
Subscribe to Boldsky

காலை உணவு நம்முடைய ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் நல்ல தாக்கத்தை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இரவில்?

நம் உடம்பைக் குறைக்கும் குறிக்கோளில் இருந்து நழுவி விடாமல் இருக்க காலை உணவைப் போலவே இரவிலும் உண்ண வேண்டுமா? இரவு உணவு என்பது நாம் சாப்பிட்டுவிட்டு அதிகம் வேலைகள் ஏதும் செய்யாத ஒன்று என்பதால் எந்த மாதிரியான உண்பது என்பதை முடிவு செய்வதில் நமக்கு அவ்வளவாக தெளிவிருக்காது. பல முறை நாம் வெறும் சாலடையோ அல்லது சூப்பையோ அருந்திவிட்டு முடித்துவிடுவோம்.

Foods For Dinner To Aid Weight Loss

ஆனால் இதில் கவலை கொள்ளுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஏனென்றால் உடம்பைக் குறைப்பதற்கென்றே பிரத்தியேகமான இரவு உணவுகள் உள்ளன. இதனால் நீங்கள் வயிற்றைக் காயப்போட்டு உறங்க முயற்சிக்க வேண்டியதில்லை.

உங்கள் இரவு உணவுக்கும் உடல் எடைக்கு குறைப்பிற்கு உகந்த ஐந்து உணவுகள் பற்றி பின்வரும் பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

1. சாலட்: உங்கள் இரவு உணவை ஒரு எளிமையான சாலடுடன் துவங்குங்கள். இதனை முதலில் உண்ணுவது உங்கள் கலோரி அளவை வெகுவாகக் குறைக்கும். சாலடுகள் தரும் நார்ச்சத்துக்கள் உங்கள் வயிற்றை நிறைவாக வெகுநேரம் வைத்திருப்பதால் அதிகம் கலோரிகள் உட்செல்வத்தை தவிர்க்கமுடியும்.

2. புரோட்டீன்: மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை இரவில் எடுத்துக்கொள்வதை விடுத்து புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளையம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களையும் உட்கொள்ளுங்கள். அண்மை ஆய்வுகள் பால் பொருட்களில் உள்ள புரோட்டீன்கள் உடம்பில் எடையைக் குறைத்து மெல்லிய உடல்வாகாப் பெற உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. சிக்கன், மீன், பீன்ஸ் போன்ற உணவுகள் மாவு மற்றும் கொழுப்புச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் காட்டிலும் வயிறை நிறைவாக வைப்பதால் இரவு உணவுக்கு ஏற்றவை.

3. வீட்டில் செய்த அஸ்பராகஸ் சிக்கன் சூப் : ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கும் இஞ்சி போன்ற உடல் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி (புரோட்டீன்) கொண்டு செய்யப்படும் இந்த சூப் இரவு உணவுக்கு ஏற்ற சிறந்த தேர்வாக இருக்கும்.

4. முழு தானியங்கள்: சிவப்பரிசி, கினோவா மற்றும் கோதுமை பிரட் ஆகியவை முழு தானியங்களால் செய்யப்படுவதால் அவற்றை உட்கொள்ளலாம். இந்த முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம்ஆகியவை இடுப்புப் பகுதியில் சதையை அதிகம் கரைக்கும். எனவே சுத்திகரிப்பு அல்லது பாலிஷ் செய்த தானியங்களை இரவில் உண்ணுவதை தவிருங்கள்.

5. இனிப்புகளை முழுவதுமாக புறந்தள்ளவேண்டாம்: இனிப்புகள் ஆரோக்கியமான உணவு இல்லை என்பதால் இவற்றை விடுவது நல்லது தான். ஆனால் உண்மையில் சர்க்கரையை முழுமையாக ஒதுக்கிவிடுவதும் எதிர்வினையாற்றி உங்களை பிற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உண்ணவைக்கும்.

ஆய்வாளர்கள் இனிப்புகளை முற்றிலும் ஒதுக்கிவிடுவது சிஆர்எச் எனப்படும் கார்டிகோட்ரோபின் வெளியிடும் ஹார்மோனை சுரக்கச் செய்யும் எனவும் இது பொதுவாக நாம் படபடப்புடன் அல்லது அழுத்தத்திலிருக்கும்போது வெளியிடப்படும். அதிக மன அழுத்தம் உங்களை சத்தான உணவுகள் உண்ணுவதை தடுத்து பிடித்தமான ஆரோக்கியமற்ற உணவுகளை நாடும்படி செய்யும்.

English summary

Foods For Dinner To Aid Weight Loss

Foods For Dinner To Aid Weight Loss
Story first published: Tuesday, November 8, 2016, 19:00 [IST]
Subscribe Newsletter