'ஜல்ஜீரா' குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஜல்ஜீரா என்பது ஓர் பிரபலமான வடஇந்திய பானம். ஜல் என்பது தண்ணீர், ஜீரா என்பது சீரகம். அதாவது சீரகத் தண்ணீரைத் தான் அப்படி சொல்கிறார்கள். ஆனால் இந்த பானத்தில் சீரகம் மட்டுமின்றி, வேறு சில மசாலா மற்றும் மூலிகைப் பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும்.

இதனை வெயில் நன்கு கொளுத்தும் போது குடித்தால், இன்னும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த பானம் பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. நிபுணர்களும் ஜல்ஜீரா பானத்தைக் குடித்தால் வாய்வுத் தொல்லை, செரிமான பிரச்சனைகளைப் போக்கலாம் என்று கூறுகின்றனர்.

சரி, இப்போது இந்த பானத்தைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்திற்கு நல்லது

செரிமானத்திற்கு நல்லது

ஜல்ஜீராவில் செரிமானத்திற்கு உதவும் ப்ளாக் சால்ட் உள்ளது. மேலும் இது நெஞ்செரிச்சல், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலைத் தரும்.

இரத்த சோகையைத் தடுக்கும்

இரத்த சோகையைத் தடுக்கும்

சீரகம் இரத்த சோகையைத் தடுக்கும். ஏனெனில் சீரகத்தில் இரும்புச்சத்து வளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பானத்தைக் குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுவதோடு, உடலும் குளிர்ச்சியடையும்.

வயிற்று உப்புசம்

வயிற்று உப்புசம்

வயிறு உப்புசமாக இருந்தால் சோடா குடிப்பதற்கு பதிலாக ஜல்ஜீரா குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த பானம் குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும் உணர்வைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இது அடிவயிற்று வலி, வாந்தி, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.

வைட்டமின் சி குறைபாடு

வைட்டமின் சி குறைபாடு

இந்த பானத்தில் மாங்காய் பொடி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் வைட்டமின் சி ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த பானத்தைப் பருகுவதன் மூலம் வைட்டமின் சி குறைபாட்டினைத் தடுக்கலாம்.

கலோரிகளை எரிக்கும்

கலோரிகளை எரிக்கும்

எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஓர் அற்புதமான பானம். ஏனெனில் இதில் கலோரிகள் இல்லை மற்றும் இது கலோரிகளை எரிக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ளது.

நீர்ச்சத்து மேம்படும்

நீர்ச்சத்து மேம்படும்

உங்கள் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த பானத்தைப் பருகுவதன் மூலம், உடலின் நீர்ச்சத்து தக்கவைக்கப்படுவதோடு, உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேற்றப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink Up Jaljeera For Good Health

Do you know the health benefits of drinking jaljeera? Read on to know more...
Story first published: Tuesday, February 9, 2016, 17:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter