இந்த மருந்து கல்லீரலை அழிக்கும் என்பது தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கல்லீரலின் இயக்கம் முற்றிலும் நிற்கும் நிலையைத் தான் கல்லீரல் செயலிழப்பு என்று கூறுவார்கள். கல்லீரல் உடலில் மிகப் பெரிய பணியை செய்வதால், இது செயலிழந்து போனால், மூளையில் இரத்த அழுத்தம் அதிகரித்து, அதனால் இறப்பை கூட சந்திக்க நேரிடும்.

கல்லீரலின் இயக்கத்தை நாம் சாதாரணமாக உட்கொண்டு வரும் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் சளி, இருமல் மருந்துகளில் உள்ள அசிட்டமினோஃபென் என்னும் உட்பொருள் பெரிதும் பாதிக்கும்.

Doctors Warn: This Common Drug Destroys Your Liver

இந்த உட்பொருள் சுமார் 2,600 பேரை மருத்துவமனையில் படுக்க வைத்ததுடன், 56,000 பேரை தீவிர சிகிச்சை அறைக்கு செல்ல வைத்ததோடு, வருடத்திற்கு சுமார் 460 பேரின் உயிரைப் பறித்துள்ளது.

இந்த உட்பொருள் குறைவான அளவில் மருந்து, மாத்திரைகளில் இருந்தாலும், நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால், அது ஒரு கட்டத்தில் உடலில் அதிகரித்து, மோசமான விளைவை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசிட்டமினோஃபென் (Acetaminophen)

அசிட்டமினோஃபென் (Acetaminophen)

ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேனில் வெளிவந்த ஒரு ஆய்வில், அசிட்டமினோஃபென் மிகவும் நச்சுமிக்கது மற்றும் இது கல்லீரலை பெரிதும் பாதிக்கக்கூடியது என்றும் வெளிவந்துள்ளது.

 ஆய்வு

ஆய்வு

இந்த ஆய்வில் ஆரோக்கியமான உடலைக் கொண்ட 145 பேர் கலந்து கொண்டனர். அவர்களை அந்த ஆய்வுக்குழுவினர் மூன்று குழுவாக பிரித்தனர்.

முதல் குழு

முதல் குழு

முதல் குழுவினருக்கு அசிட்டமினோஃபெனுடன் வேறு உட்பொருட்கள் கலக்கப்பட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டது.

இரண்டாம் குழு

இரண்டாம் குழு

இரண்டாம் குழுவினருக்கு வெறும் அசிட்டமினோஃபென் நிறைந்த மருந்து கொடுக்கப்பட்டது.

மூன்றாம் குழு

மூன்றாம் குழு

மூன்றாம் குழுவினருக்கு தீங்கு விளைவிக்காத மருந்துப் போலி கொடுக்கப்பட்டது.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

ஆய்வின் முடிவில் அசிட்டமினோஃபென் கலந்த மருந்துகளை உட்கொண்ட இரண்டு குழுவினரின் உடலில் கல்லீரல் நொதிகளின் பாதிப்பு 31-44% இருப்பது தெரிய வந்தது.

அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இது உடலில் உள்ள முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்ளுட்டாதையோனை வெளியேற்றி, கல்லீரலில் அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

குறிப்பு

குறிப்பு

எனவே தலை வலி, மூட்டு வலி, தசை வலி, முதுகு வலி போன்றவற்றிற்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வைத்தியங்களை நாடுங்கள். இதனால் கல்லீரல் செயலிழப்பதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Doctors Warn: This Common Drug Destroys Your Liver

Do you know Acetaminophen drug destroys your liver? Read on to know more...
Story first published: Monday, December 5, 2016, 17:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter