இரவில் படுக்கும் போது காலில் ஈரமான சாக்ஸ் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கெமிக்கல் கலந்த மருந்துகளால் மட்டும் தான் நம் உயிரை காப்பாற்ற முடியும் என்று நினைக்க வேண்டாம், இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்து, நம் உடல்நல பிரச்சனைகளுக்கு காலங்காலமாக நம் முன்னோர் பின்பற்றி வந்த இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி வந்தாலே பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

இங்கு ஏழு விதமான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் ஓர் எளிய வைத்திய முறையை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. இதைக் கேட்கும் போது நிச்சயம் வித்தியாசமாகத் தான் இருக்கும். ஆனால் அவற்றைப் பின்பற்றினால் நிச்சயம் உடனடி தீர்வு கிடைக்கும்.

தினமும் இரவில் படுக்கும் முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள்!!!

அது என்னவென்று கேட்கிறீர்களா? அது இரவில் படுக்கும் போது கால்களில் ஈரமான சாக்ஸை அணிந்து வந்தால், ஏழு வித பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். சரி, இப்போது இரவில் படுக்கும் போது காலில் ஈரமான சாக்ஸ் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சலுக்கு மாத்திரைகளைப் போட்ட பின்பும், காய்ச்சல் குணமாகாமல் இருந்தால், இவ்வழியைப் பின்பற்றுங்கள். அதற்கு ஒரு பெளலில் 2 டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து, அதில் சாக்ஸை நனைத்து, பிழிந்துவிட்டு, கால்களில் சாக்ஸை அணிந்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் 40 நிமிடங்களில் காய்ச்சல் பறந்தோடுவதை நீங்கள் காணலாம்.

சளி

சளி

உங்களுக்கு பல நாட்களாக சளி நீடித்திருந்தால், அப்போது இந்த முறையைப் பின்பற்றுங்கள். அது என்னவெனில், 2 கப் வெதுவெதுப்பான பாலை ஒரு பௌலில் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, அதில் 2 பெரிய வெங்காயங்களை வெட்டிப் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் சாக்ஸை எடுத்து, அக்கலவையில் நனைத்து பிழிந்து, காலில் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் நிச்சயம் விரைவில் சளி குணமாகும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், சீஸ் பாதி துண்டுடன் பாதி ஆப்பிள், 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஆளி விதை சேர்த்து, அதில் 1 கப் சுடு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அக்கலவையில் சாக்ஸை நனைத்து பிழிந்து, கால்களில் இரவில் படுக்கும் போது அணிய மலச்சிக்கல் பிரச்சனை அகலும்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

சிறிது சீரகம் மற்றும் சோம்பை, 2 கப் தண்ணீரில் போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும், அதில் சாக்ஸை நனைத்து பிழிந்து, கால்களில் அணிந்து கொண்டால், 1/2 மணிநேரத்தில் செரிமான பிரச்சனை நீங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். எப்படியெனில் இந்த விதைகள் மறைமுகமாக இரத்த ஓட்டத்தை வயிற்றில் அதிகரித்து, செரிமான பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

மிகுந்த சோர்வு

மிகுந்த சோர்வு

எப்போதும் மிகுந்த சோர்வை உணர்கிறீர்களா? அப்படியெனில் இந்த இயற்கை வழியைப் பின்பற்றுங்கள். அதுவும் ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் சுடு தண்ணீர் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, சாக்ஸை கால்களில் அணிந்து, நேரடியாக நீரில் வைத்து, சிறிது நேரம் கழித்து கால்களை வெளியே எடுத்துவிட வேண்டும். இதனால் அதில் உள்ள யூகலிப்டஸ் எண்ணெய் மனநிலையை மேம்படுத்தி, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

ஹேங்ஓவர்

ஹேங்ஓவர்

ஹேங்ஓவருக்கு சிறந்த இயற்கை தீர்வு என்றால், அது கால்களில் ஈரமான சாக்ஸை அணிந்து தூங்குவது தான். இதனால் உடலின் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்டு, இரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு, ஹேங்ஓவர் தடுக்கப்படும்.

கெட்ட கனவுகள்

கெட்ட கனவுகள்

இரவில் கெட்ட கனவுகள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? அதைத் தடுக்க இரவில் படுக்கும் போது, சுடுநீரில் நனைத்து பிழிந்த ஈரமான சாக்ஸை கால்களில் அணிந்து தூங்குங்கள். இதை எந்த ஒரு ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை. இருப்பினும் இந்த முறை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Sleeping With Wet Socks

Did you know that one can benefit a lot by sleeping with wet socks. This treatment is the best for curing hangovers, overnight. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter