ஏன் உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும் என சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அப்படி நாம் சாப்பிடும் உணவை எத்தனை பேர் நன்கு மென்று விழுங்குகிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். முக்கால்வாசி மக்கள் உணவை சரியாக மென்று விழுங்குவதில்லை என்று தான் சொல்வார்கள்.

உண்ணும் உணவை நன்கு மென்று விழுங்கினால் தான், உணவின் முழு நன்மையையும் பெற முடியும். இல்லாவிட்டால், ஆரோக்கியத்தை வழங்கும் உணவும் தீங்கை தான் விளைவிக்கும். எனவே ஒவ்வொருவரும் உணவை நன்கு மென்று விழுங்க வேண்டியது அவசியம்.

இங்கு உணவை நன்கு மென்று விழுங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து, இனிமேலாவது திருந்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

உணவை நன்கு மென்று பொறுமையாக உட்கொள்வதன் மூலம், அளவுக்கு அதிகமான உணவை உட்கொண்டு அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம். மேலும் உணவை நன்கு மென்று உண்டால், குறைவான உணவிலும் வயிறு நிறைந்திருப்பதை உணர்வீர்கள்.

நன்மை #2

நன்மை #2

உண்ணும் உணவை மென்று சாப்பிடுவதால், உணவுகள் எளிதில் இரைப்பையில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

நன்மை #3

நன்மை #3

செரிமானமானது வாயில் இருந்து தான் ஆரம்பமாகிறது என்பது தெரியுமா? ஆம், உணவை மெல்லும் போது, வாயில் உள்ள உமிழ்நீர் மற்றும் பற்களால் உணவுகள் நன்கு அரைக்கப்பட்டு, சிறு துகள்களாக வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது. இதனால் வயிறு உப்புசத்துடன் இருப்பதில் இருந்து விடுபடலாம்.

நன்மை #4

நன்மை #4

உண்மையில் எப்பேற்பட்ட சுவையான உணவும், நன்கு மென்று சாப்பிடும் போது தான், அதன் உண்மையான சுவை தெரியும். மேலும் அந்த இன்பமே தனி தான்.

நன்மை #5

நன்மை #5

உணவை மென்று சாப்பிடும் போது, செரிமானத்தில் ஈடுபடும் குறிப்பிட்ட ஹார்மோன்களான லிப்தின், க்ரெலின் போன்றவை உற்பத்தி செய்வதற்கு போதிய நேரம் கிடைக்கும்.

நன்மை #6

நன்மை #6

ஒருவர் உணவை உட்கொள்ளும் போது குறைந்தது 30-50 முறையாவது வாயை அசைப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இக்காலத்தில் யாரும் உணவை மென்று சாப்பிடுவதில்லை, வாயில் உணவைப் போட்டதும் அப்படியே விழுங்கிவிட்டு, பின் வயிறு சரியில்லை என்று புலம்புவார்கள்.

நன்மை #7

நன்மை #7

முக்கியமாக உணவை நன்கு மென்று விழுங்குவதால், உடல் எடை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கப்படுவதாக நிறைய உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால், முதலில் உணவை நன்கு மென்று விழுங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Chewing Food Well

Do you know why you must chew food well? It is the starting point of healthy digestion. Here are the benefits of chewing food well…
Please Wait while comments are loading...
Subscribe Newsletter