தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட பொருள் என்பது தெரியும். நம் அன்றாட சமையலில் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பூண்டு பயன்படுகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

இத்தகைய பூண்டு மிகுந்த காரத்தன்மை கொண்டது. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த பொருளும் கூட. நம் முன்னோர்களும் பூண்டைக் கொண்டு ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து வந்தனர்.

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!

இத்தகைய பூண்டை ஒருவர் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்ததில், அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்பிட சிறந்த நேரம்

சாப்பிட சிறந்த நேரம்

பூண்டை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஏனெனில் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்திற்கு பூண்டு மிகச்சிறந்த மருந்து. அதிலும் இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எவ்வித பக்கவிளைவுமின்றி இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

உட்காயம் குணமாகும்

உட்காயம் குணமாகும்

பூண்டு மற்றொரு சிறப்பான குணம், அது உடலினுள் ஏற்படும் உட்காயங்களைக் குணப்படுத்தும். ஆகவே உட்காயங்கள் குணமாக கண்ட மாத்திரைகளைப் போடுவதைத் தவிர்த்து, பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ்

மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ்

பூண்டை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டதில், மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் குறைந்தது. எனவே உங்களுக்கும் இப்பிரச்சனை இருப்பின், பூண்டை பச்சையாக சாப்பிடுங்கள்.

நோய்த்தொற்றுகள்

நோய்த்தொற்றுகள்

பூண்டு பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுகள், பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கவல்லது. அதிலும் ஒருவர் சிலநாட்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலைத் தாக்கிய நோய்த்தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

முக்கியமாக பூண்டையை பச்சையாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதில் இருந்து விலகி இருக்கலாம்.

நுரையீரல்

நுரையீரல்

பூண்டு நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, ஏராளமான நுரையீரல் பிரச்சனைகளான நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நெஞ்சு சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மருந்து மாத்திரைகளை விட சிறந்தது

மருந்து மாத்திரைகளை விட சிறந்தது

மொத்தத்தில் ஒரு பல் பூண்டில் 5 மி.கி கால்சியம், 12 மிகி பொட்டாசியம் மற்றும் 100 சல்ப்யூரிக் சேர்மங்கள் உள்ளதால், இது மருந்து மாத்திரைகளை விட சிறந்தது என்பதை யாரும் மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing: He Ate Garlic On An Empty Stomach Everyday! Here's What Happened...

AMAZING: He ate garlic on an empty stomach every day! Here's what happened… Read on to know more...