இதயத்தை பாதிக்கும் மோசமான போதைப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

புகை, மது, கள்ளச் சாராயம் போன்றவை தான் நாம் பெரும் போதைப் பழக்கம். இதனால் தான் எண்ணற்ற அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று நாம் கருதுகிறோம். ஆனால், உலக அளவில் இவற்றை தவிர வேறு சில போதைப் பழக்கங்களின் காரணமாக தான் மோசமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.

கஞ்சா, ஹெராயின், ஓபியம், கோக்கைன், கிரிஸ்டல் மெத் மற்றும் மரிஜுவானா போன்றவை தான் இந்த பட்டியலில் முதல் இடங்களில் இருக்கின்றன. இவற்றின் மூலம் நிழல் உலகில் பெரும் வர்த்தகம் நடந்து வருகிறது. இதற்காக கொள்ளை, கொலை, கடத்தல் என பல கிளை தவறுகளும் அதிகளவில் நடந்து வருகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹெராயின்

ஹெராயின்

மிகவும் அபாயமான போதை பொருளாக கருதப்படுவது ஹெராயின். வெறும் மூன்று நாட்களில் இது ஒருவரை அடிமைப் படுத்திவிடும். இதயம், சிறுநீரகம் போன்றவற்றை வலுவாக பாதிப்படைய செய்கிறது. மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது, அது வேகமாக பரவ செய்கிறது.

ஓபியம்

ஓபியம்

உயரை பறிக்கும் மற்றுமொரு போதை பொருள் இது. இதயத்தை வலுவாக தாக்கும். இரத்த அழுத்தம் மற்றும் நாடி துடிப்பை குறைத்து மரணமடைய வைக்கிறது.

கோக்கைன்

கோக்கைன்

இது ஒரு மோசமான போதை பொருள். மூளை மற்றும் இதயத்தை வலுவாக பாதிக்கும் திறன் கொண்டது கோக்கைன். நரம்பு மண்டலத்தை வலுவிழக்க செய்து திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது கோக்கைன். இதிலிருந்து மீண்டுவர முயன்று மன அழுத்தத்தில் மூழ்கியவர்கள் தான் அதிகம்.

கிரிஸ்டல் மெத் (Crystal Meth)

கிரிஸ்டல் மெத் (Crystal Meth)

அனைத்து போதை பொருட்களும் உடல்நலத்தை சீர்குலைய வைக்கும். இது, "அதுக்கும் மேல" ரகம். மனநிலையை பாதித்து சைக்கோ போல மாற்றுவிடும் திறன் கொண்டது இந்த கிரிஸ்டல் மெத். கோவத்தை அதிகப்படுத்தும், நினைவாற்றலை மங்க செய்கிறது. மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்றவ ஏற்பட காரணமாக இருக்கிறது கிரிஸ்டல் மெத்.

மரிஜுவானா

மரிஜுவானா

சிகரெட்டில் வைத்து பயன்படுத்தப்படும் கஞ்சா தான் மரிஜுவானா. அனைத்து நாடுகளிலும் மிகவும் பிரபலமாக விற்கப்படும் போதை பொருள் தான் இந்த மரிஜுவானா.பெருமளவில் உலகம் முழுவதும் உயிரழப்பு ஏற்பட இந்த மரிஜுவானா ஓர் மிகப்பெரிய காரணமாக இருந்து வருகிறது. உடனடியாக இதயத்தை பாதிக்கும் திறன் மரிஜுவானாக்கு இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Worst Drugs That Can Make Your Heart Bleed

These are some of the worst drugs in the world, which can rip your heart open and cause your your life. Take a look at the 5 drugs you should never opt for.
Story first published: Wednesday, October 14, 2015, 14:37 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter