ஏன் காபியை விட டீ நல்லது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

காபி. காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காவிட்டால், சிலருக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. மேலும் உலகில் ஏராளமானோர் விரும்பி குடிப்பது காபியைத் தான். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? காபி குடிப்பதை விட, டீ குடித்தால் தான் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

மேலும் நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் கூட காபியை விட டீயைத் தான் விரும்பி குடிப்பார்கள். அதுவும் மூலிகை டீயைத் தான் விரும்பி அடிக்கடி குடிப்பார்கள். உங்களுக்கு காபியை விட டீயில் அப்படி என்ன நன்மை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனநிலை மேம்படும்

மனநிலை மேம்படும்

காபி குடித்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் தீமைகளைத் தான் சந்திக்க நேரிடும். அதுவே மூலிகை டீக்களான சீமைச்சாமந்தி அல்லது லாவெண்டர் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், அது மனதை அமைதிப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். எனவே நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், நல்ல மனநிலையுடனும் இருக்க நினைத்தால், தினத்தை தொடங்கும் முன் ஒரு கப் டீ குடியுங்கள்.

தொப்பையைக் குறைக்கலாம்

தொப்பையைக் குறைக்கலாம்

காபி குடிப்பதால் உடல் எடையோ, தொப்பையோ குறையாது. ஆனால் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புச் செல்களின் அளவு குறைந்து, உடல் எடை குறையும். மேலும் அமெரிக்க ஆய்வு ஒன்றில், 12 வாரங்கள் தொடர்ந்து க்ரீன் டீயைக் குடித்து வந்தால், உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

வலிமையான நோயெதிர்ப்பு சக்தி

வலிமையான நோயெதிர்ப்பு சக்தி

டீ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். அதிலும் க்ரீன் டீயில் உள்ள EGCG எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலைத் தாக்கி இருமல் மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

காபியை மாலை நேரங்களில் குடித்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் இடையூறு ஏற்படும். ஏனெனில் காபி உடலுக்கு சுறுசுறுப்பை அளித்து, தூக்கத்தைப் போக்கிவிடும். அதுவே மூலிகை டீயைக் குடித்தால், அதில் காப்ஃபைன் குறைவாக இருப்பதால், தூங்குவதில் எவ்வித இடையூறும் ஏற்படாது. மாறாக அது நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

செரிமானம் சீராக நடைபெறும்

செரிமானம் சீராக நடைபெறும்

காப்ஃபைன் அதிகம் நிறைந்த காபியைக் குடித்தால், அது உடலினுள் அசிடிட்டியின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் மற்றும் இதர இரைப்பை கோளாறுகளை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி டீ, புதினா டீ போன்றவற்றை குடித்தால், அது உடலில் அல்கலைன் அளவை அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெற உதவும்.

வாய் ஆரோக்கியம்

வாய் ஆரோக்கியம்

டீயில் உள்ள புளூரைடு மற்றும் டானின்கள், வாயில் பற்காறை ஏற்படுவதைக் குறைக்கும். எனவே உங்கள் வாய் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், காபிக்கு பதிலாக டீ குடியுங்கள்.

புற்றுநோய் தடுக்கப்படும்

புற்றுநோய் தடுக்கப்படும்

க்ரீன் டீ, ப்ளாக் டீ போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இதனால் அது புற்றுநோயைத் தடுக்கும். அதிலும் க்ரீன் டீயில் பாலிஃபீனாலும், ப்ளாக் டீயில் தியாப்ளாவின்கள் மற்றும் தியாரூபின்களும் உள்ளன. அதற்காக டீயை அதிக அளவில் குடிக்க வேண்டாம். இதனால் கடுமையான பக்க விளைவுகளைத் தான் சந்திக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why You Should Definitely Replace Your Coffee With Tea

Why you should defenitely replace your coffee with tea? Read on to know more.
Story first published: Saturday, December 5, 2015, 15:11 [IST]
Subscribe Newsletter