Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பங்குனி உத்திரத்துக்கு 1 கப் பச்சை பயறு இருந்தா இந்த மாதிரி டக்குனு பாயாசம் பண்ணுங்க...டேஸ்ட் அமோகமா இருக்கும்
Pachai Payaru Payasam Recipe in Tamil: தமிழர்கள் கொண்டாடும் மிகவும் சிறப்பான பண்டிகைகளில் பங்குனி உத்திரம் என்றாகும். தமிழ்க் கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முருகன் கோவிலுக்கு சென்றும், இந்த நாளில் வீட்டில் இனிப்புகள் செய்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த வருடம் பங்குனி உத்திரத்திற்கு ஒரு வித்தியாசமான இனிப்பை செய்யலாம்.
பாயாசம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சேமியா பாயாசம்தான். சில சமயங்களில் நாம் ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம், பால் பாயாசம் என வேறு விதமான பாயாசங்களை செய்வோம். அதேசமயம் நீங்கள் பாரம்பரியமான, ஆரோக்கியமான அதேசமயம் சுவையான ஒரு பாயாசத்தை செய்ய விரும்பினால் இந்த பச்சை பயிறு பாயசத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த பச்சை பயறு பாயாசம் பல நூற்றாண்டுகளாக தமிழர் கொண்டாட்டங்களில் முக்கிய இடத்தை பிடித்து வந்திருக்கிறது.

உங்களுக் சுவையான பச்சை பயறு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் முழுப் பச்சைப்பயறு
- 1/2 கப் வெல்லம்
- 1/4 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
- 10 முந்திரிப் பருப்பு
- 1 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் தேங்காய்ப்பால்
- குங்குமப்பூ சிறிதளவு
செய்முறை:
- பச்சை பயறு பாயசம் செய்யத் தொடங்குவதற்கு, முதலில் பச்சை பயறை கழுவி, பயறு முழுவதும் அளவிற்கு தண்ணீரில் இரவு முழுவதும் அல்லது குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 4 மணி நேரத்திற்குப் பிறகு, பாசிப்பயறை அதிலுள்ள நீருடன் சேர்த்து ஒரு பிரஷர் குக்கருக்கு மாற்றவும்.
- சுமார் 4 முதல் 5 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைத்து, அடுப்பை அணைக்கவும். குக்கரின் அழுத்தம் தானாக வெளியேறும் வரை அப்படியே விடவும்.
- பிரஷர் இயற்கையாக வெளியேறியதும், வேக வைத்த பச்சைப் பயறை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் சூடாக்கி, வெல்லத்தை தண்ணீருடன் சேர்த்து, வெல்லம் கரையும் வரை காத்திருந்து, வெல்லப்பாகு தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்க்கவும்.
- பின்னர் தேங்காய்ப்பாலைச் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பை அணைக்கவும்.
- பாசிப்பருப்பு பாயசத்தை ஒரு பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றிக்கொண்டு, அதில் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து நன்கு கலந்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் நெய்யை சேர்த்து சூடாக்கவும், பின்னர் உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து, பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து பாயசத்தின் மீது கொட்டி நன்கு கிளறவும். அவ்வளவுதான் சூப்பரான பச்சை பயறு பாயாசம் ரெடி!



Click it and Unblock the Notifications