முதுகு வலி தாங்க முடியலையா? அப்ப இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

பண்டைய காலத்தில் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ததால், முதுகு வலியை சந்தித்தோரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் தற்போது கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம். இதனால் முதுகு வலியால் கஷ்டப்படுபவர்கள் எண்ணமுடியாத அளவில் உள்ளனர்.

இதற்கு நீண்ட நேரம் சரியான நிலையில் உட்காரமல் இருப்பது காரணமாக இருந்தாலும், வைட்டமின் டி குறைபாடு, சரியான உணவுகளை உண்ணாமல் இருப்பது போன்றவைகளும் காரணமாக உள்ளன.

ஆகவே முதுகு வலி வராமல் இருக்க கீழே கூறியுள்ளவற்றை மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் முதுகு வலி வருவதைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்சியம் மற்றும் வைட்டமின் டி

கால்சியம் மற்றும் வைட்டமின் டி

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் அந்த கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது. ஆகவே கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்து வர வேண்டும். அதில் பால், முட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

தினமும் சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்து வந்தால், முதுகு வலியைத் தவிர்க்கலாம். அதில் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதே மூட்டு மற்றும் கால்களை நேராக நீட்டியபடி குனிந்து கால் விரல்களை தொட வேண்டும். இப்படி 20 முறை செய்ய வேண்டும். நாளாக நாளாக 2 நிமிடம் வரை செய்யுங்கள்.

பூண்டு, மஞ்சள், இஞ்சி

பூண்டு, மஞ்சள், இஞ்சி

உணவில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை சேர்ப்பதன் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா? இவற்றை சேர்ப்பதால், எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

உட்காரும் நிலை

உட்காரும் நிலை

டிவி பார்க்கும் போதோ, அலுவலகத்தில் உட்காரும் போதோ, நேராக அமர வேண்டும். மேலும் அவ்வப்போது இந்நிலையில் அமர்வதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வெந்நீர் குளியல்

வெந்நீர் குளியல்

முதுகு வலிக்கும் போது வெந்நீரில் குளித்தால், முதுகு வலி குறைவதோடு, சோம்பல் நீங்கி உற்சாகமும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Get Rid Of Lower Back Pain

Here are some of the ways to get rid of lower back pain. Take a look...
Story first published: Wednesday, May 27, 2015, 14:30 [IST]
Subscribe Newsletter