Latest Updates
-
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலை சமாளிக்க இந்த 5 செடிகள் போதும்… வீடே குளிர்ச்சியாகவும் செல்வமும் தானாக பெருகும்! -
நீட் மறுதேர்வு எப்போது? சிபிஐ அதிரடி கைதுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க!
Skin Care Tips In Tamil: தற்போது முக அழகை கெடுக்கும் வகையில் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் ஒன்று தான் கரும்புள்ளிகள். இந்த கரும்புள்ளிகளானது சுற்றுச்சூழல் மாசுபாடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், போதுமான சரும பராமரிப்பு இல்லாமை போன்றவற்றால் வரக்கூடியவை.
இந்த கரும்புள்ளிகளை போக்குவதற்கு மார்கெட்டுகளில் ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை அனைத்திலும் கெமிக்கல்கள் உள்ளன. இந்த கெமிக்கல்கள் அனைவருக்குமே சிறந்த பலனை தந்துவிடாது. எனவே எடுத்தவுடனேயே சரும பிரச்சனைகளுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிப்பு கொடுப்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதே சிறந்தது.

அப்படி கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் அரிசி நீர். அதுவும் இந்த அரிசி நீரைக் கொண்டு டோனர் தயாரித்து தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, அது கரும்புள்ளிகளைப் போக்க உதவுவது மட்டுமின்றி, சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்போது கரும்புள்ளிகளைப் போக்க உதவும் அரிசி நீர் டோனரை எப்படி தயாரிப்பது என்பது குறித்தும், அதைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் காண்போம்.
வழி #1 : புளிக்க வைத்த அரிசி நீர்
* இதற்கு 1/2 கப் அரிசியை நன்கு 2 முறை கழுவி, பின் அந்த அரிசியில் 2 கப் சுத்தமான நீரை ஊற்றி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் 30 நிமிடம் கழித்து ஊற வைத்த அரிசியை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அந்த நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, லேசாக மூடி வைத்து, 24 முதல் 48 மணிநேரம் நன்கு புளிக்க வைக்க வேண்டும்.
* 48 மணிநேரம் கழித்து, அந்நீரில் இருந்து ஒரு புளித்த நீர் வாசனை வரும். பின்பு அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.
* இந்த டோனரை 1 வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
வழி #2: பிரஷ்ஷான அரிசி நீர்
* இதற்கு 1 கப் அரிசியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு சாதத்தை வேக வைக்க வேண்டும்.
* சாதம் வெந்ததும், அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வடிகட்டிய அரிசி நீரை நன்கு குளிர வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொண்டால், 4-5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
அரிசி நீர் டோனரை எப்படி பயன்படுத்துவது?
* இந்த டோனரை பஞ்சுருண்டையில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 2 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் 2-3 முறை பயன்படுத்தி வர, ஒரு மாற்றத்தை விரைவில் காணலாம்.
அரிசி நீர் டோனரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
* அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் மற்றும் அல்லன்டோயின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்களில் ஏற்படும் சேதத்தை பாதுகாக்கின்றன. இதன் மூலம் சருமத்தில் கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.
* அரிசி நீரில் இனோசிட்டால் உள்ளது. இது சரும செல்களை சரிசெய்யவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், கரும்புள்ளிகளைப் போக்கவும் உதவுகிறது.
* அரிசி நீரானது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள் போன்றவற்றை திறம்பட வெளியேற்றி, சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
* அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும் போது, திறந்த சருமத்துளைகள் இறுக்கமடைந்து, சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி, சரும அழகை மேம்படுத்த உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


