Latest Updates
-
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதியம் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
Jupiter Rise In Cancer 2026: ஜோதிடத்தில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தேவர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். கிரகங்களில் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.

தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியானது குருவின் உச்ச ராசியாகும். இதுவரை கடக ராசியில் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் உதயமாகி, வலுவடைந்துள்ளார்.
குரு பகவான் உதயமாகியிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவதோடு, கோடீஸ்வர யோகத்தையும் பெறவுள்ளனர். இப்போது உச்சமடையும் குரு பகவானால் நிதி நிலையில் உயர்வைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளதால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டமிட்டு நிதி விஷயங்களை கையாண்டால் நிதி நிலைமை வலுவடையும். குரு பகவானின் அருளால் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளதால், திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும் மற்றும் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரும். நிதி நிலைமை வலுவடையும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளதால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பண வரவு அதிகரித்து, நிதி நிலைமை வலுவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகியிருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவைல் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சூப்பராக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



